Home » கணினி » விண்டோஸ் XP வேண்டாம்? சொல்கிறது மைக்ரோசாப்ட்
விண்டோஸ் XP வேண்டாம்? சொல்கிறது மைக்ரோசாப்ட்

விண்டோஸ் XP வேண்டாம்? சொல்கிறது மைக்ரோசாப்ட்

நண்பர் ஒருவர் எனது கணினியில் புதிய சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது நிறைய சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் ஆக மாட்டேன் என்கிறது. என்னவென்று கொஞ்சம் பாருங்கள் என்று கணினியை காண்பித்தார். பார்த்தேன். விண்டோஸ் XP இயங்குதளம் போட்டிருந்தார். நீங்கள் இயங்குதளம் மாற்றினால் போதும் என்றேன். மாற்றாமல் எதாவது செய்ய முடியுமா என்றார். முடியாது என்று சொல்லிவிட்டு  விண்டோஸ் 7 இயங்குதளம்  போட்டுக்கொடுத்தேன். அதன் பின்னர்தான் இதை ஒரு பதிவாக எழுதினால் நமது வாசகர்களுக்கு பெரும் உதவியாக இருக்குமே என்று இந்த பதிவை எழுதியுள்ளேன்.

விண்டோஸ் XP சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இயங்குதளம் (OS). அதன் பின்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 10 என மூன்று புதிய இயங்குதளங்களை அறிமுகம் செய்து விட்டது. இருப்பினும் இன்னும் பலர், தங்கள் வீடு மற்றும் அலுவலங்களில் விண்டோஸ் XP-யையே பயன்படுத்தி வருகிறார்கள். இது நம்மூர்களில் மட்டுமல்ல. உலக நாடுகளில் பல இடங்களில் இது இன்னனும் நடந்து வருகின்றது.

படிங்க : ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

அதனால் மைக்ரோசாப்ட் கடந்த 3 வருடங்களாகவே இது பற்றி எச்சரித்து வருகின்றது. ஆனாலும் பலர் தெரிந்தும் தெரியாமலும் விண்டோஸ் XP-யை பயன்படுத்தி வருகிறார்கள்.

Stop using windows xp 1

அதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு லாபமா நஷ்டமோ, அது  ஒரு புறம் போகட்டும். ஆனால் நமக்கு நிச்சயம் நஷ்டம்தான்.

உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமோ, தெரியாதோ. சொல்கிறேன் கேளுங்கள்.  இன்டர்நெட்டில் நமது கணினியை இணைத்து விட்டோம் என்றால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணினியை தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்த முடியும். சார் என் கணினியில் அப்படி தாக்குதல் நடத்தும் அளவிற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

படிங்க : ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா? அலசல் ரிப்போர்ட்

ஆனால் இதை பொழுதுபோக்காக பலர் செய்கிறார்கள். அடுத்தவர் கணினியில் உள்ளனவற்றை திருடுவதில் இவர்களுக்கு பேரானந்தம்.

சுருக்கமாக விண்டோஸ் XP  பயன்படுத்துவதால் என்ன விளைவு 

 

  1. புதிய சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வதில் பிரச்சினை ஏற்படலாம்
  2. எதிர்காலத்தில் குரோம், பயர் பாக்ஸ் ப்ரௌசெர் பயன்படுத்துவதில் சிக்கல் நேரலாம் .
  3. இன்டர்நெட் பேங்கிங் செய்யும் போது, உங்கள் பாஸ்வோர்டுகள் பறிபோகலாம். இதனால் உங்கள் பேங்கில் உள்ள பணம் சூறையாடப்படலாம்.
  4. தமிழ் டைப்பிங் இன்ஸ்டால் செய்வது கொஞ்சம் கஷ்டம். (ஆனால் சிலர் அழகி போன்ற மென்பொருட்கள் பயன்படுத்துகிறார்கள், இதை விட இலகுவான கூகிள் இன்புட் இன்ஸ்டால் செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது)
படிங்க : தமிழில் தட்டச்சு செய்வது எப்படி ?   

இதில் என்ன பெரிய கொடுமை என்றால் கணினி சர்வீஸ் செய்யும் பலர் விண்டோஸ் XP போல ஒரு சிறந்த OS இல்லை. அதனால் இதையே பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்களாம். இதை ஒருமுறை மைக்ரோசாப்ட் நிறுவனமே வேடிக்கையாக சொல்லியுள்ளது.

ஆனால் கணினியை எங்கள் வீட்டில் ஒரு பேருக்குத்தான் வைத்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போன்ற எந்த தேவையும் எனக்கில்லை என்றால், உங்கள் சித்தம் தாராளமாக விண்டோஸ் XP பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதுவும் உங்கள் பொறுப்பில்.

இது குறித்து ஏதனும் சந்தேகம் இருந்தால், இந்த படிவத்தில் உங்கள் கேள்வியினை கேட்கலாம். முடிந்த வரை உடனடியாக பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.