Home » கணினி » இணையதளம் மூடப்பட்டது
இணையதளம் மூடப்பட்டது

இணையதளம் மூடப்பட்டது

எந்த வாசகருடைய முகமும் பார்த்ததில்லை ஆனால் நீங்களும் நானும் எப்போதும் எழத்து வடிவில் தொடர்பில் இருக்கின்றோம். இது போன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த இணையத்திற்கு நாம் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஒரு பெரிய மாற்றத்தை நான் செய்து முடிப்பதற்கு முன்  வாசகர்கள் அனைவருக்கும் நமது தளத்தின் நிலைப்பாடு குறித்து சொல்ல வேண்டுமென்று தோன்றியது, இத்தனை வருடம் நான் எழுதியவற்றை படித்து, விமர்சித்தவர்களுக்கு தளத்தின் மாறுதல் குறித்து சொல்லவில்லை எனில் அது தவறாகிவிடும் அல்லவா? அதனால் இதை ஒரு பதிவாக எழுதிவிட்டேன்.

சிறிய வரலாறு

கடந்த 2013 வருடம் இணையதளம் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் Tamilexplorer.com என்ற பெயரில் இணையதளம் துவங்கினேன். அப்போது, கணினி, சமையல், மகளிர் குறித்த பதிவுகள் அனைத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுவான பெயராக Tamilexplorer என்னும் வார்த்தையை தேர்வு செய்தேன்.

ஆனால் துவங்கிய சில நாளில் நமது தளம் தொழில்நுட்பம் பக்கம் திசைமாற அதுவே நமது தளத்தின் அடையாளமாக போனது. அதன் பின்னர், நமது தளத்திற்கு நிறைய பார்வையாளர்கள் கிடைத்தார்கள், அவர்கள் நாளடைவில் நண்பர்களாக மாறினார்கள். என்னால் அவர்களும், அவர்களால் நானும் நிறைய பயனடைந்தோம்.

இடையில் வந்த வில்லன்

இப்படி நமது இணையதளத்தின் கதை சுமுகமாக சென்றுக் கொண்டிருக்க இடையில் வில்லன் போல வந்தது பேஸ்புக். ஒரு நாள் காலையில் ஒரு பதிவை எழுதிவிட்டு அதை பேஸ்புக்கில் பகிர நினைக்கையில், உங்களது தளம், பேஸ்புக்கின் பாதுகாப்பை கருதி இன்றிலிருந்து தடை செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு என்னை ஒரு நிமிடம் அப்படியே உறைய வைத்தது.

சரி என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துக்கொண்டு, டொமைன் பெயரை மாற்றிவிடலாம் என்று எண்ணினேன். ஆனால் அங்கே நிறைய சிக்கல்கள் இருந்தன.

என்ன பெயர் வைப்பது? 

அதில் பெரிய சிக்கல் என்ன பெயர் வைப்பது. TamilExplorer எனக்கு மட்டுமில்லாமல் வாசகர்களுக்கும் நன்றாக பழகிவிட்டதால் TamilExplorer.org என்று வைத்துவிடலாமா என்று முதலில் யோசித்தேன், பிறகு அந்த யோசனை கைவிடப்பட்டு, Technology என்பதை சுருக்கி Tech என்றும் Gunaseelan என்னும் ஏன் பெயரை சுருக்கி Guna என்றும் மொத்தத்தில் TechGuna.com என்ற பெயரை தேர்வு செய்துவிட்டேன். இந்த புதிய பெயர் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த பெயர் மாற்றத்தை கருத்தில் கொண்டு  ஒரு சில மாதங்கள் எதுவும் எழுதவில்லை. இதை பார்த்த நமது வாசகர்கள் ஏன் ஏழுதுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று ஈமெயில் மூலமாகவும், போன் வாயிலாகவும் கேட்டனர். கேட்டவர்கள் அனைவரிடம் விரைவில் எழதுகிறேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டு, நேற்று  23/4/17 சனிக்கிழமை ஆபீஸ்க்கு லீவ் சொல்லிவிட்டு, தளத்தின் பெயர் மாற்றும் பணியில்  அமர்தேன். இதற்கு என்னுடைய நண்பர் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் பெருமளவு உதவி செய்தார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

வெற்றிகரமாக மாற்றப்பட்டது

மதியம் 3 மணிக்கு பெயர் மாற்றம் அனைத்தும் முடிந்து, தளம் சரியான இயக்க முறைக்கு திரும்பியது. இன்னும் சில இடங்களில் மற்றும் சில லிங்குகளை மாற்ற வேண்டிய வேலை மிச்சம் உள்ளது.

அதனால் சில  பக்கங்களை நீங்கள் பார்க்க முற்படும்போது அந்த பக்கம் NOT FOUND என்று வரக்கூடும். தயவு கூர்ந்து கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .

இந்த புதிய தளத்திற்காக ஒரு பேஸ்புக் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, அதை மறக்காமல் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று லைக் செய்யுங்கள்.
http://fb.com/techguna

யூ டுயுப்

http://youtube.com/c/techguna

அதே போன்று நமது தளத்தின் புதிய மின்னஞ்சல் முகவரி: techgunamail@gmail.com

மேலும் ட்விட்டர், யூ டுயுப் லிங்க்கள் குறித்த தகவல்களை விரைவில் பதிவேற்றம் செய்கிறேன்.

இதுவரை நீங்கள் Tamilexplorer.com க்கு கொடுத்த வந்த ஆதரவுக்கு என்னுடைய நன்றிகள். அதே போன்று TechGuna.com வுக்கும் உங்களுடைய ஆதரவு என்றும் தேவை. நிச்சயம் அது  கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.