Home » கணினி » கணினி பழுது ஏற்பட்டால் சர்விஸ் செய்ய யாரிடம் கொடுக்கலாம் -தனியார் சர்விஸ் அல்லது கம்பெனி சர்விஸ்
கணினி பழுது ஏற்பட்டால் சர்விஸ் செய்ய யாரிடம் கொடுக்கலாம் -தனியார் சர்விஸ் அல்லது கம்பெனி சர்விஸ்

கணினி பழுது ஏற்பட்டால் சர்விஸ் செய்ய யாரிடம் கொடுக்கலாம் -தனியார் சர்விஸ் அல்லது கம்பெனி சர்விஸ்

இன்று வீடு, அலுவலகம் என்று எங்கு பார்த்தாலும் கணினி மயமாக போய்விட்டது. ஆனாலும் வீட்டில் கணினி வைத்திருக்கும் பலருக்கு கணினியை பற்றிய போதிய அடிப்படை அறிவு இருப்பதில்லை. நேற்றுவரை  நன்றாக  இயங்கிக் கொண்டிருந்த கணினி திடிரென்று நின்று விட்டால் கூட  உடனடியாக பதறிப்போய் விடுகிறார்கள்.  

கணினி திடிர்ரென்று இயங்காமல் போவதற்கோ அல்லது இயக்குதலில் மாற்றம் ஏற்படவோ பல காரணங்கள் உண்டு. கணினி இயங்கும்போது முறையாக Shut Down செய்யாமல் திடீர்ரென்று  ஆப் செய்வதோ அல்லது ஒரு ப்ரோக்ராம் இயங்கிகொண்டிருக்கும் போது கணினியை ரீஸ்டார்ட் செய்வதோ நிச்சயம் நம் கணினியை இயங்காமல் செய்துவிடும். இதை தவிர்த்து பல ஹார்ட்வேர், சாப்ட்வேர் காரணங்களும் உண்டு.

சரி. ஒரு வேளை உங்கள் கணினி எப்படியோ பழுதாகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.   என்ன செய்வது உதவிக்கு யாரை அழைப்பது. தனியார் சர்விஸ் நிறுவனத்தை நாடலாமா அல்லது கம்பனி சர்விஸ் நிறுவனத்தை நாடலாமா ?

படிங்க : ஹாக்கராக வேண்டுமா ? இதை படியுங்கள்

எனக்கு தெரிந்த வரை கம்பனி சர்விஸ் நிறையவே செலவு ஆகும். உங்கள் கணினி வாரண்ட்டி காலத்தில் இருந்தால், உங்களுக்கு ஏதும் பிரச்சினை இருக்காது. ஆனால்  வாரண்ட்டி காலம் முடிவுற்ற பின்னர் நீங்கள் உங்கள் கணினியில் சிறு ஒயர் ஒன்றை மாற்ற வேண்டுமென்றாலும் அதற்கு பல ஆயிரங்களை உங்களிடம் கறந்துக் கொள்வார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, என்னுடைய டெல் இன்ஸ்பிரான் லேப்டாப் ஒன்றுக்கு திரையில் கோளாறு ஏற்பட்டது. அதாவது லேப்டாப் திரையை நீங்கள் நகர்த்தினால் திரையில் படங்கள் ஒழுங்காக தெரியாது, சிலவேளைகளில் திரையே அணைந்து விடும். இதற்காக டெல் நிறுவனத்திடம் போன் மூலம் உதவி கேட்டேன். அவர்கள் உடனடியாக ரூ. 1364 பணம் கட்ட சொன்னார்கள். நானும் ஆன்லைன் மூலம் பணம் கட்டிவிட்டு, அவர்களை தொடர்புக்கொண்டேன். டெல் நிறுவனத்தில் இருந்து கணினி சர்விஸ் செய்பவர் என் வீட்டிற்க்கு வரும் தேதியை என்னிடம் சொன்னார்கள்.

படிங்க : கூகிள் தேடுதலுக்கு சில டிப்ஸ்

அதன் பிறகு டெல்லில் இருந்து சர்விஸ் செய்பவர் குறித்த நேரத்தில் சரியாக என் வீட்டுக்கே வந்தார். கணினியை பிரித்துப்பார்க்கும் படலம் துவங்கியது. வந்தவர் இந்த வேலைக்கு புதிது என்பதை அவர் கணினி கையாளும் போதே தெரிந்துக்கொண்டேன். மெல்லிய பாகங்களை எப்படி கையாளுவது என்பது அவருக்கு சரியாக தெரியாமல் கொஞ்சம் திணறினார்.

பிறகு அவரிடமே அவரின் பின்னணி விபரங்களை கேட்டுத்தெரிந்து கொண்டேன். அவர் EEE (Electrical and Electronics) பிரிவில் டிப்ளோமா படித்துள்ளதாகவும், கடந்த மூன்று மாதமாக டெல் கணினி சர்விஸ் பிரிவில் வேலை செய்வதாகவும் சொன்னார்.

சரி மூன்று மாதம் தான் ஆகிறது என்று சொல்கிறீர்கள், கணினி சர்விஸ் செய்வதில் முன் அனுபவம் ஏதேனும் உண்டா என்று கேட்டேன். அதற்குஅவர் இல்லை சார். வேலைக்கு சேர்ந்த போது  கம்பனியில்  பயிற்சி கொடுத்தார்கள் என்று சொன்னார். கேட்கவே கொஞ்சம் பயமாக இருந்தது. அந்த பயிற்சி நிச்சயம் போதுமானதாக இருந்திருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை.

எங்கே எதாவது செய்யத் தெரியாமல் செய்து விட்டு கணினியை எதாவது செய்து விடுவாரோ என்று பயந்துக்கொண்டே அவர் அருகில் அமர்ந்துக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தேன். கடைசியில் கணினியை பிரித்து பார்த்து விட்டு டிஸ்ப்ளே ஒயர் (Display Wire) பழுதாகி விட்டது என்று கூறினார்.

சரி இதை  மாற்ற எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டேன். அதை கம்பெனியில் இருந்து உங்களுக்கு கால் பண்ணி சொல்வாங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அவர் போன 20 நிமிடங்களில் டெல் சர்விஸ் பிரிவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண்மணி ஒருவர் உங்கள் டிஸ்ப்ளே ஒயர் மாற்ற ரூ.7000/- ஏழாயிரம் செலவு ஆகும். எப்போ பணம் கட்டுவீங்க என்றார். அப்போது எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. ஏனெனில் ஏற்கனவே இதற்காக ரூ. 1364/- செலவு செய்துவிட்டேன். இப்போது திரும்பவும் பணம் கட்டுங்க என்றால் என்ன செய்வது.

அவர்கள் எனக்கு அனுப்பிய ஈமெயில் பிரதி

அவர்கள் எனக்கு அனுப்பிய ஈமெயில் பிரதி

நான் அவரிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்டேன். டிஸ்ப்ளே கேபிளோட விலையே 800/- தானே பிறகு எதற்கு 7000/-.

அதற்கு அவர் இல்லை சார். டிஸ்ப்ளே கேபிள் மாற்றும் போது டிஸ்ப்ளேவையும் சேர்த்து மாற்ற வேண்டும்,அதனால் இது ரெண்டுக்குமானதுதான் இந்த தொகை  என்றார். சரிங்க என்  டிஸ்ப்ளே சரியாத்தானே இயங்குது, டிஸ்ப்ளே கேபிளில் மட்டும் தானே பிரச்சினை என்றேன். அதெல்லாம் இல்லை நீங்க ரெண்டையும் மாத்திதான் அகனும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

பணம் செலுத்தியதற்கான ரசிது

பணம் செலுத்தியதற்கான ரசிது

மாற்ற வேண்டிய டிஸ்ப்ளே கேபிள்

மாற்ற வேண்டிய டிஸ்ப்ளே கேபிள்

அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, Just Dial பற்றி நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு போன் செய்து கம்ப்யூட்டர் சர்விஸ் நிறுவனங்கள் பற்றி விசாரித்தேன். பிறகு அவர்கள் சொன்ன ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அவர்களிடம் போன் செய்து என் கணினியில் இருக்கும் பிரச்சினையை சொன்னேன். அவர்கள் என் வீட்டிற்க்கே வந்து பிரச்சினை சரி செய்து கொடுத்துவிட்டு சென்றார்கள். இதற்கான செலவு ரூ. 1000/-

டிஸ்ப்ளே கேபிள் : ரூ. 798.00

சர்விஸ் சார்ஜ் : ரூ. 200.00

அதிலிருந்து மற்றவர் வாரண்டி காலம் முடிவுற்ற கணினி பழுது ஏற்பட்டால், தனியார் நிறுவனங்களையே சர்விஸ் செய்ய பரிந்துரை செய்கிறேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

மற்றவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள், நிச்சயம் உதவியாக இருக்கும்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.