Home » மொபைல் » அழைப்பவர் யாரென்று தெரியுமா ? – “ட்ரூ காலர்”
அழைப்பவர் யாரென்று தெரியுமா ? –  “ட்ரூ காலர்”

அழைப்பவர் யாரென்று தெரியுமா ? – “ட்ரூ காலர்”

சில விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தால் அது அடுத்தவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைப்பவன் நான். அதனால் எனக்கு தெரிந்த சில தகவல்களை மற்றவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று சொல்லாமல் விட்டுவிடுவேன். அது போல நண்பர் ஒருவருடன் கடந்த வாரம் பேசிக்கொண்டு இருக்கும் போது தற்செயலாக  “ட்ரூ காலர்” பற்றி பேச்சு துவங்கியது. 

பேச துவங்கி ரொம்ப நேரத்திற்கு பிறகுதான் நண்பர் கேட்டார்,  “ட்ரூ காலர்” அப்படின்னு சொல்றீயே, அப்படினா என்ன? அதன் பின்புதான் இந்த பதிவை எழுத நினைவு வந்தது.

சரி இப்போது விஷயத்திற்கு வந்துவிடலாம்.

படிங்க: கைநிறைய சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி மொழிகள்

 “ட்ரூ காலர்” என்பது நமது போனுக்கு முன் பின் தெரியாதவர் யாரேனும் போன் செய்தால், அவரது பெயர் ஊர் போன்ற தகவல்களை நமக்கு அளிக்கும் மொபைல் ஆப். இதன் மூலம் தேவையில்லாத நம்பர்களை நீங்கள் ப்ளாக் செய்யவும் முடியும் அல்லது அந்த அழைப்புகளை நீங்கள் ஏற்காமலும் இருக்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட கால் உங்களுக்கு எப்போதும் மார்கெட்டிங் விஷயமாக வந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் ஸ்பாம் அல்லது பிளாக் செய்து அந்த நம்பரில் இருந்து இனிமேல் உங்களுக்கு கால் எதுவும் வராமல் தடுக்கலாம்.

படிங்க: வெப்சைட் உருவாக்குவது எப்படி தெரியுமா?

விண்டோஸ், ஐ போன், ப்ளாக்பெர்ரி, ஆன்ட்ராய்டு போன்ற எல்லா வகை ஃபோன்களிலும்  “ட்ரூ காலர்” பயன்படுத்தப் முடியும்.

நிச்சயம் எல்லோருக்கும் பயனுள்ள செயலியாக இருக்கும் என்பதால் இது பற்றி இன்று எழுதியுள்ளேன்.

உங்கள் போனில் தரவிறக்கம் செய்ய கூகிள் பிளே ஸ்டோர் சென்று “True Caller” என்று டைப் செய்தால் இந்த செயலி உங்களுக்கு கிடைக்கும்.

படிங்க: என் புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.