Home » சாப்ட்வேர் » .vcf லிருந்து excel வரை – How to Back up Android Phone Contacts
.vcf லிருந்து excel வரை – How to Back up Android Phone Contacts

.vcf லிருந்து excel வரை – How to Back up Android Phone Contacts

பொதுவாக நமது ஆன்ட்ராய்டு போன்களில் நிறைய கான்டாக்களை (Contact) வைத்திருப்போம். அவை எப்போவதாவது அழிந்து போனாலோ அல்லது போன் தொலைந்து போனாலோ பழைய கான்டாக்களை திரும்ப பெறுவது சிரமமாக போய்விடும். அதோடு இதற்காக நமது போனில் உள்ள ஒவ்வொரு நபரின் போன் நம்பர்களை உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கவும் முடியாது.

இந்த பதிவு என்னிடம் கேளுங்கள் பகுதி மூலமாக, திரு. வெங்கடேஷ் அவர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க எழுதப்படுகின்றது. நீங்களும் உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க  இங்கு கிளிக் செய்யலாம்.

இதற்கு என்ன செய்யலாம். எளிதான தீர்வு இதோ, முதலில் உங்கள் ஆன்ட்ராய்டு போனில் காண்டாக் பகுதிக்கு செல்லுங்கள்.

பிறகு, வலது புறம் கோடு போல் இருக்கும், குறியீடை அழுத்துங்கள், உங்களுக்கு ஒரு மெனு ஒன்று காண்பிக்கப்படும், அதில் Export என்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.

vcf to excel

பிறகு, export செய்யப்படும் பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்று கேட்க்கும்.

Sim Card, internal memory, SD card என்று நீங்கள் விரும்பிய இடத்தில் சேமிக்க சொன்னவுடன். போன் அத்தனை கனடாக்ட்களையும் சேமிக்க துவங்கும். (பொதுவாக SD கார்டில் சேமித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் திரும்ப இந்த பைலை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்)

இப்போது, உங்கள் போனை கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள். கணினியில் உங்கள் SD கார்டுக்கு சென்று .vcf என்று மேலே கணினி விண்டோ வலது புறத்தில் இருக்கும், சர்ச் பெட்டியில் தேடுங்கள்.

கிடைக்கும் .VCF பைலை டெஸ்க்டாப்பில் காபி செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

.VCF to EXCEL Download

இப்போது மென்பொருளை திறந்து, Add Vcf file என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, டெஸ்க்டாப்பில் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும்,   .VCF பைலை இந்த மென்பொருளுக்குள் கொண்டு வாருங்கள்.

பிறகு கீழே இருக்கும் Start converting என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் .VCF பைல் excel பைலாக மாறிவிடும். பிறகு நீங்கள் நினைத்தபடி எடிட் அல்லது பத்திரமாக வைத்துக்கொள்ளலாம்.

Excel மாற்றங்கள்

.VCF ல்  இருந்து excelக்கு மாற்றப்பட்ட  பைலை  திறக்கும்போது ஒரு வேளை பிழை செய்திபோல் ஏதேனும் தோன்றினால் YES கொடுத்து திறந்து கொள்ளுங்கள்.

vcf to excel in tamil

அதன் பின் போன் நம்பர்கள் சரியான முறையில் தெரியவில்லை என்றால், Home–> Number –>$ அருகில் இருக்கும் கீழ் நோக்கு அம்பு குறியை கிளிக் செய்து, More accounting Formats என்று இருக்கும். அதை கிளிக் செய்தவுடன் வரும் மெனுவில், இடது புறத்தில் number என்ற முறைக்கு மாற்றிக்கொண்டு, வலது புறத்தில் Decimal place என்ற இடத்தில், 0 (Zero) என்று போட்டுக்கொண்டு, கீழே (1234) என்று இருப்பதை செலக்ட் செய்து Ok கொடுத்தால் போதும்.

படிங்க: போன் தொலைந்து போனால் இதை செய்யுங்கள்

சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி ?

நேரமும் 3 புத்தகத்தின் விற்பனையும்

பிறகு Save as செய்து சேமித்துக் வைத்துக்கொண்டு எதிர்கால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

செயல்முறை விளக்க வீடியோ கீழே.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.