இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியை தன் ஸ்மார்ட் போனுக்கு இன்ஸ்டால் செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த செயலி ஒரு வருடம் மட்டும் இலவசம் அதன் பின்பு வருடம் வருட வருடம் ரூ. 55 அதாவது 1 டாலர் அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நெறிமுறையை வாட்ஸ்ஆப் வகுத்திருந்தது.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த விதிமுறைகளை கொஞ்சம் தளர்த்தி, இனி வாழ்நாள் முழுவதும் வாட்ஸ்ஆப் இலவசம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அட ! வாட்ஸ்ஆப் இலவசம் என்றால் நல்லதுதானே. ஆனாலும் எவ்வளவு அக்கறை நம் மேல் இந்த வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு என்று பெருமை பட்டுக்கொள்ள வேண்டாம். இங்கு எல்லாமே பிசினஸ்தான்.
படிங்க : கணினி பழுது ஏற்பட்டால் சர்விஸ் செய்ய யாரிடம் கொடுக்கலாம் -தனியார் சர்விஸ் அல்லது கம்பெனி சர்விஸ்அன்றிலிருந்து இன்றுவரை ஏன் எதிரகாலத்தில் தொடங்கபோகும் நிறுவனங்கள் வரை பணம் சம்பாதிக்க தொடங்கப்படும் நிறுவனங்களே. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. குறிப்பாக இணையதளங்கள், ஆன்ட்ராய்டு செயலிகள் என்று மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் அனைத்துமே காலபோக்கில் பணம் காய்க்கும் மரமாக மாறிவிடுகின்றது.
சிறிய உதாரணம் தொடக்க காலத்தில் விளையாட்டாக தொடங்கப்பட்ட தளங்கள் எல்லாம் இன்று கோடிகள் சம்பாதிக்கும் கதைகள் எல்லாம் எங்கோ ஒரு புள்ளியில் நடந்ததுதான்.
படிங்க : வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !அதே போல்தான் இன்று வாட்ஸ்ஆப் தொடுத்திருக்கும் இந்த இலவச வலையில் எங்கோ ஒரு இடத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு லாபம் இல்லாமல் போவதில்லை.
எதிர்க்காலத்தில் வாட்ஸ்ஆப் மற்ற பெரிய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து வியாபாரத்தை, லாபத்தை பெருக்க பார்க்கலாம். இது வரை விளம்பரங்களின் தொல்லைகள் ஏதும் இல்லாமல் இயங்கி வந்த வாட்ஸ்ஆப் பயணிகளுக்கு விளம்பரங்கள் ஏதேனும் காட்டப்படலாம். இப்படி எதோ ஒரு வகையில் வாட்ஸ்ஆப் லாபம் சம்பாதிக்க நினைக்கும் என்ற கருத்தில் எந்த தவறும் இல்லை.
படிங்க : கூகிள் தேடுதலுக்கு சில டிப்ஸ்
எது எப்படி போனாலும் எங்களுக்கு வாட்ஸ்ஆப் இலவசம் சந்தோசம்தான் என்று சொல்கிறீர்களா. எனக்கும் சந்தோசம்தான். இருந்தாலும் இந்த சின்ன இலவசம் எப்படி இவர்களை பல கோடி ரூபாய்களை சர்வ சாதாரணமாக சம்பாதிக்க வைக்கிறது என்ற கேள்விக்கு விடை காணும் வகையில் இந்த பதிவை எழுத நினைத்தேன். அதில் பாதியளவு எழுதி விட்டேன் என்று நினைக்கிறன்.
மற்றவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள், நிச்சயம் உதவியாக இருக்கும்.
என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017