Home » கணினி » 70,000 பேரின் உயிரை காப்பாற்றிய இணையதளம்
70,000 பேரின் உயிரை காப்பாற்றிய இணையதளம்

70,000 பேரின் உயிரை காப்பாற்றிய இணையதளம்

காசு பணம் இல்லையென்றாலும் கூட மனசில் நிம்மதி இருந்தால் ஒருவன்  கோடிஸ்வரன்தான். ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் கூட நிம்மதி வேண்டும் என்பதை பாடலில் இது போல் அழகாக சொல்லியிருப்பார்கள். “கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லேயே அது இந்த காலமே

என் தேவனே ஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு”

இப்படி உலகில் நிம்மதி தேடி அலைபவர்களுக்கு மத்தியில் அதை ஏன் நாம் எல்லோருக்கும் வழங்கக் கூடாது என்று ரிச்சா சிங் யோசித்திருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் YourDost.com.

படிங்க: பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் !

இந்த இணையதளம் துவங்கியது பற்றி அவரே சொல்கிறார்.

நான் ஐ.ஐ.டி யில் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய அறைத் தோழி (ரூம் மேட்) , திடீரென ஒரு நாள் தற்கொலை  செய்துக்கொண்டாள். படிப்பு சுமையே மன அழுத்தமாக மாறி அவளது வாழ்வை பறித்து விட்டது என்பதை என்னால் சில காலத்திற்கு பின்புதான் புரிந்துக்கொள்ள முடிந்தது.

richa singh

அதனால் Yourdost.com என்ற இணையதளத்தை துவங்கி அதன் மூலம் மன அழுததில் உள்ளவர்களை தகுந்த மனோத்தத்துவ நிபுணர்களின் கவுன்சிலிங்கிற்கு உட்படுத்தி அவரை தற்கொலை எண்ணத்தில் இருந்து மாற்றுகிறோம்.

படிங்க: பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

மனஅழுத்தம் ஏற்பட்டால் அதை யாரிடம் சொல்வது என்றுத் தெரியாமல் அதை மனதிற்குள்ளே பூட்டி வைத்து, ஒரு நாள் தற்கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறார்கள். மன அழுத்தத்தால் வாடுபவர்கள் Yourdost.com இணையதளம் வந்து உங்களது குறைகளை தகுந்த உளவியல் நிபுணர்களிடம் சாட் வாயிலாக பகிர்ந்து தீர்வு பெறமுடியும்.

இதற்காக எப்போதும் 200 நிபுணர்கள் ஆன்லைனில் கவுன்சிலிங் வழங்க காத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 300-400 சாட்கள் இந்த இணையதளத்தில் நடைபெறுகிறது.

அதோடு இதுவரை, தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்த 70,000 பேர் இந்த இணையதளத்தின் தகுந்த ஆலோசனைகள் மூலம் காப்பற்றப்பட்டுள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.

படிங்க: நேர்மைக்காக குவியும் டாலர்கள்

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.