Home » சாப்ட்வேர் » அதிரடி சவுண்ட்டுக்கு KM PLAYER
அதிரடி சவுண்ட்டுக்கு KM PLAYER

அதிரடி சவுண்ட்டுக்கு KM PLAYER

கணினியில  படம் பாக்கனும்ன நமக்கெல்லாம் உடனே ஞாபகத்துக்கு வருவது VLC மீடியா பிளேயர், இதோட எளிமையான அமைப்பு நம்மை அப்படியே கட்டி போட்டுருச்சி. இல்லையா ?அதேபோல, நம்ம கணினியில  பாட்டு கேக்கணும்னா, அதுக்கு KM PLAYER தான் பெஸ்ட். இப்போதைக்கு இத அடிச்சிக்க எந்த மியூசிக் பிளேயரும் இல்லை. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி எல்லோரும் VLC மீடியா பிளேயர்லயே  பாட்டும் கேட்பாங்க, படமும் பார்பாங்க, ஆனால் VLC மீடியா பிளேயர்ல வர்ற அதிகபடியான சவுண்ட் லேப்டாப் ஸ்பீக்கர்கள பாதிப்படைய செய்வதால், பல பேர் KM பிளேயர்யருக்கு படைஎடுக்கிறார்கள்.

இந்த KM பிளேயர்ரோட தனி சிறப்புனு பார்தோம்னா, இது VLC போலவே அனைத்து வகையான பார்மட்களையும் ப்ளே செய்யும். VCD, DVD, AVI, MKV, Ogg Theora, OGM, 3GP, MPEG-1/2/4, WMV, RealMedia, QuickTime,zip,rar   போன்ற பிரபலமான பார்மட்கள் இதில் அடக்கம்.

அதுமட்டுமில்லாமல் இதில் சாதாரண படத்தை 3D ல் கண்டுகளிக்கும் வசதியும் உள்ளது.

முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கிகொள்ளுங்கள் . பிறகு  உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் (கவனம் : இன்ஸ்டால் செய்யும்போது, தேவையில்லாத மூன்றாவது நபர் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யாமல் தவிர்த்து விடுங்கள்)

பாடல்களை ப்ளே செய்வதற்கு முன் அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்திகொள்ளுங்கள் . டைம் பார்க்கு (Time Bar)  கீழே ஒரு சின்ன கியர் போன்ற அமைப்பு இருக்கும். அதை கிளிக் செய்த உடன், மற்றும்மொரு சிறிய பெட்டி உங்களுக்கு காண்பிக்கப்படும்.

அதில் இரண்டாவதாக இருக்கும் Audio Controls செலக்ட் செய்யுங்கள், இப்போது வலதுபுறத்தில் RESET என்றும் EFFECTS என்றும் இருக்கும். அதில் EFFECTS கிளிக் செய்து “TRUE BASE, TREBLE ENHANCER, CRYSTALITY  என்பதை மட்டும் கிளிக் செய்து கொண்டால் போதும்.

இனி 2.1 அல்லது 5.1 சும்மா தூள் கிளப்பலாம்

தரவிறக்க

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.