தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு இன்று யாரும் நோட், பென், புத்தகம் என்று அலைவதில்லை. எதாவது நோட்ஸ் எடுக்கணும்னா கூட, கணினியிலோ அல்லது டேபிலேட்லையோ அல்லது ஸ்மார்ட் போன்லையோ சேமித்து வைத்துகொள்கிறார்கள்.
அப்படி சேமித்த கோப்புகள் என்றாவது ஒரு நாள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியோ, அல்லது நாமே கூட சில நேரத்தில் மறந்துபோய் அழித்துவிடலாம். இப்போ, இனிமேதான் வேலையே இருக்கு. அழிந்த கோப்புகளை எப்படி திரும்பபெறுவது என்பதுதான் பெரிய கேள்வி.
இந்த மாதிரி நேரங்களில் அவசரபடாமல் நிதானமாக செயல்பட்டால் உங்கள் அழிந்த கோப்புகள் திரும்ப கிடைக்கலாம். குறிப்பாக உங்கள் கணினியில் கோப்புகள் அழிக்கப்பட்டதாக நீங்கள் உணர்ந்த பின் உங்கள் கணியில் வேறு எந்த கோப்புகளையும் புதிதாக பதிய முயற்சி செய்யதீர்கள். அப்படி நீங்கள் செய்தால்,அழிந்த கோப்புகளை மீட்டெடுப்பதில் சிக்கல் ஏற்படும்.
RECUVA
இந்த தளத்திற்கு சென்று RECUVA சாப்ட்வேரை டவுன்லோட் செய்துகொண்டு, இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். இப்போது சாப்ட்வேரை திறந்து கொள்ளுங்கள்.உங்கள் அழிந்த கோப்பு, அழிவதற்கு முன்பாக இருந்த இடம், கோப்பின் வகை, போன்ற சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு SCAN அல்லது DEEP SCAN கொடுங்கள்.SCAN செய்வதற்கு சில நிமிடங்கள் வரை ஆகலாம்.அதுவரை பொறுத்திருங்கள்.
முழுவதும் SCAN செய்து முடித்தபிறகு, உங்கள் அழிந்த கோப்பு அதில் எங்காவது இடம்பெற்றிருக்கிறதா என்று பாருங்கள். பிறகு அந்த கோப்பின் பெயர் முன்பு சிவப்பு அல்லது பச்சை குறியீடு இருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால், பச்சை குறியீடு உள்ள கோப்புகளை மட்டுமே நம்மால் முழுவதுமாக மீட்க முடியும். சிவப்பு நிற குறியீடு இருந்தால் மீட்க முடியாது. பின் பச்சை குறியீடு உள்ள கோப்பை கிளிக் செய்து உங்கள் கோப்பை ரெகவர் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்கஇதுபோல் அழிந்த கோப்புகளை மீட்க பல சாப்ட்வேர்கள் உள்ளது. அவைகளை கீழே கொடுத்துள்ளேன். தரவிறக்கி பயன்பெறுங்கள்.
- Puran FileRecovery,
- Glary Undelete,
- EaseUS
- Pandora Recovery,
- Restoration,
- Avira UnErase Personal,
- Free Undelete,
- ADRC Data Recovery Tools,
- CD Recover Toolbox,
பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள் .
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017