Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » இணைய அடிமைகள் – ஷாக் ரிப்போர்ட்
இணைய அடிமைகள் – ஷாக் ரிப்போர்ட்

இணைய அடிமைகள் – ஷாக் ரிப்போர்ட்

ஒரு காலத்தில் சிகரட், மது, மற்றும் பல இன்பங்களுக்கு அடிமையாக இருந்த நாம், இப்போது இணையத்துக்கும் அடிமையாகிவிட்டோம். ஒரு நாள் இணையம் இல்லாவிடில், அன்று ஏதோ கப்பல் முழுகியது போலவே கன்னத்தில் கைவைத்துக்கொண்டு சோகமே உருவாக உட்கார்ந்து விடுகிறோம், குறிப்பாக இளைய சமுதாயத்தினர்.    

இந்த ஆண்டு ஜனவரி மாதம், டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட கூகிள் நிறுவன தலைவர் எரிக் சிமித், எதிர்காலத்தில் இணையம் என்ற ஒன்று காணாமல் போய்விடும் என்ற தனது பார்வையை முன்வைத்தார். அதாவது, பயன்படுத்தும் எல்லா பொருட்களிலும் இணையம் ஆக்கிரமித்து, இணையம் எதில் எதில் ஆக்கிரமித்து இருக்கிறது என்பதை கூட நம்மால் பிரித்து பார்க்க முடியாதபடி இணையம் நம்முள் கலந்துவிடும் என்பதையே எரிக் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு, சற்று சீனா பக்கம் தலை சாய்த்தோம் எனில், பல அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆன்லைன் கேம்ஸ், சமுக வலைத்தளங்கள், இன்னும் பல இணைய சேவைகளுக்காக,  இணையத்தில் மணிகணக்காக உட்கார்ந்து இருப்பவர்களை, இணைய அடிமைகளாக பாவித்து, அவர்களுக்கு தக்க மருத்துவ உதவிகள் வழங்க சீன அரசு கடந்த 2008 முதல் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மற்ற நோய்களை விட இந்த இணைய நோய், இளைய சமுதாயத்தை நாசப்படுத்திவிடும் என்பதே சீனாவின் கருத்து. இதற்காக நாடு முழுவதும், இணைய அடிமைகள் மறுவாழ்வு மையம் அமைத்து, இணையத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, மிலிட்டரி பயிற்சிகளும், மனோதத்துவ கவுன்சிலிங்கும் அளிக்க படுகிறது. அதிக நேரம் ஆன்லைன் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்ததால் என்னை இந்த மையத்தில் சேர்த்து விட்டனர் என் பெற்றோர்கள் என இந்த மையத்தில் பயிற்சி பெறும் சில இளைஞர்கள் கண்ணீர் வடிக்கின்றன.

இணைய அடிமையாக மாறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காராணமாக, தனிமைதான் ஒரு மனிதனை இணையம் பக்கம் இழுத்து செல்கிறது என்று இந்த நிறுவனந்தின் பயிற்சியாளர் தெரிவிக்கிறார். அதனால், குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள், அவர்களை கண்காணியுங்கள் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த மறுவாழ்வு பயிற்சியின் போது, பெற்றோர்களும் உடன் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, நீங்கள் இணைய அடிமையாகும் வாய்ப்பு உள்ளதா என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா ? இதோ தெரிந்துக்கொள்ளுங்கள். படிப்பு, வேலையை தவிர்த்து, மற்ற ஏதோ ஒரு தேவைக்காக இணையத்தை ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் நீங்கள் தோண்டிக்கொண்டிருந்தால், சீக்கிரத்தில் நீங்களும்  இணைய  மறுவாழ்வு மையத்திற்கு செல்ல நேரிடலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.