Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » உங்கள் பேஸ்புக் பக்கத்திற்குள் இவர்கள் நுழையலாம்
உங்கள் பேஸ்புக் பக்கத்திற்குள் இவர்கள் நுழையலாம்

உங்கள் பேஸ்புக் பக்கத்திற்குள் இவர்கள் நுழையலாம்

சமுக வலைத்தளங்கள் என்றுமே பாதுகாப்பானவை அல்ல என்பதை சென்ற மாதம் சில்ஜமாகி என்பவர் பேஸ்புக் எஞ்சினியர்ருடனான  தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டதன் மூலம்  உணர்த்தியுள்ளார்.  

அஞ்சுனா பீட்ஸ் என்னும் நிறுவனந்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் கடந்த மாதம் லாஸ் ஏன்ஜல்ஸில் உள்ள பேஸ்புக் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள என்சினியர்ருடன் உரையாடி கொண்டிருந்த போது, அந்த என்சினியர் சில்ஜமாகியின் அனுமதியோடு அவருடைய சொந்த பேஸ்புக் கணக்கினுள்  கடவுச்சொல் ஏதுமின்றி நுழைந்து காண்பித்திருக்கிறார். அதே சமயம் அடுத்தவர் தமது கணக்கினுள் அத்துமீறி நுழைந்ததற்கான பேஸ்புக் அறிவுப்பும் இவருக்கு வரவில்லை.

இதை கண்டு வியப்பில் ஆழ்ந்த சில்ஜமாகி , பேஸ்புக் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் ரொம்ப கூலாக, இது எங்கள் அன்றாட பணிகளை சிறப்பாக செய்யவும், தளத்தில் பிழைகளை நீக்கவும், சில பாதுகாப்பு காரணங்களுக்காகவும் சில பேஸ்புக் ஊழியர்களுக்கு மட்டும் இந்த அதிகாரம் வழங்கபட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.  ஆனால் பேஸ்புக் ஊழியர்களில் யார்யார் நமது கணக்கை கடவுச்சொல் இல்லாமல் பயன்படுத்தலாம், எந்த மாதிரி சூழ்நிலைகளில் அவர்கள் நமது கணக்கை  பயன்படுத்துவார்கள் என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் எதுவும் பேஸ்புக் நிறுவனத்தால் அளிக்கப்படவில்லை.

அகவே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கள்!

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.