Home » வர்த்தகம் » FLIPKART,OLX, REDBUS செய்வது எங்கு போய் முடியும்?
FLIPKART,OLX, REDBUS செய்வது எங்கு போய் முடியும்?

FLIPKART,OLX, REDBUS செய்வது எங்கு போய் முடியும்?

ஷாப்பிங் என்பதை இவ்வளவு எளிதாகவும் செய்யமுடியும், என்று நமக்கு காட்டிவிட்டன இந்த நிறுவனங்கள். குடிசை தொழில் போல் ஆரம்பித்து இன்று கோடிகணக்கில் லாபம் பார்க்கும் தொழில்கள் பாட்டியலில் இன்று ஆன்லைன் வர்த்தக தொழிலும் இணைந்து விட்டன.

FLIPKART, SNAP DEAL, JABONG, EBAY, AMAZON, MYNTRA, REDBUS என்று வரிசை கட்டிக்கொண்டு மக்களுக்கு பொருட்களை விற்பதில் முனைப்போடு நின்றாலும், இந்த நிறுவனங்கள் அடுத்து என்ன செய்யபோகின்றன என்பது சுவாரஸ்யமான கேள்வி.

ஏன்னெனில், இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக தொழிலில் முதல் இடத்தை பிடிக்க இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மக்களிடம் எப்படியாவது நன் பெயரை பெற்று விட வேண்டும் என்பதற்கான முயற்சிகள்.

கொஞ்சம் நாட்களுக்கு முன்னர் Flipkart நிறுவனம், OLX.Com நிறுவனத்துடன் கைகோர்த்தது அனைவருக்கும் முதலில் புரியாத விஷயமாக இருந்தாலும், இந்த விவகாரத்தை அவர்களே விளக்கும் போதுதான் புரிகிறது, அவர்களின் வியாபார உக்தி, உதாரனமாக ஆன்லைன்லில் புதிதாக் ஒரு TV யை  நீங்கள்  வாங்குவதற்கு முன்னர், உங்களிடம் உள்ள பழைய TV யை விற்பது இயல்பான காரியம்தான், அப்படி விற்க இந்த OLX.Com மை பயன்படுத்திக்கொண்டு, புதிய பொருட்களை FlipKart ல் வாங்கிகொள்ளலாம், என்கின்றனர், FlipKart நிறுவனத்தார் . On day Delivery, Yearly Subscription, Easy Refund Policy என்று பல சலுகைகளை கொடுத்து, இந்நிறுவனம் வாடிகையாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

இதே போல் ஆன்லைன்லில், பேருந்து பயணத்திற்கு முன்பதிவு செய்ய பயன்படும் Redbus இணையதளம், தனது வாடிக்கையாளர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட டாக்ஸி நிறுவனத்துடன் சேர்ந்து, டாக்ஸி சேவையையும் செய்ய முன்வருகிறது . அதாவது உங்கள் பேருந்து பயணம் முடிந்த பின்னர், உங்கள் வீட்டுக்கோ அல்லது ஹோட்டல்களுக்கோ செல்வதற்கு இந்த ஏற்பாடு. இந்த மாதிரி விஷயங்கள் இந்தியாவிற்கு மட்டுமில்லாமல், சில உலகநாடுகளுக்கே புதிது என்கின்றனர், இணைய வர்த்தக துறையினர்.

இந்தியாவில், அருமையான ஆன்லைன் வர்த்தக சந்தை இருப்பதை உணர்ந்து கொண்ட Amazon, Ebay போன்ற நிறுவனங்கள் அடுத்த கட்டமாக இந்தியாவில் அவர்கள் வர்த்தகத்தை பெருக்கிகொள்ள பல அதிரடி முடிவுகளை எடுப்பார்கள், என்று எதிர்பார்க்கபடுகிறது.

எது எப்படி போனாலும், எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு  எக்கச்சக்க சேமிப்பும், அதிரடி சலுகைகளும் கிடைப்பது மட்டும் உறுதி.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.