Home » மொபைல் » உங்கள் ஐ போன் 6க்கு முந்துங்கள்
உங்கள் ஐ போன் 6க்கு முந்துங்கள்

உங்கள் ஐ போன் 6க்கு முந்துங்கள்

உலக பிரசித்தி பெற்ற நிறுவனமான ஆப்பிள், ஒவ்வொரு முறையும் அதனுடைய புது வெளியீடுகளை, வெளியிடும் போது, அந்த மாதமே திருவிழாதான். அதுபோல செப்டம்பர் 19 ம் தேதி, தனது புது மாடலான  ஐ போன் 6 யை சில நாடுகளுக்கு மட்டும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியது.

அறிமுகப்படுத்திய நாளிலிருந்து எக்கச்சக்க வரவேற்பும், விமர்சனமும் வந்தவண்ணம் இருக்கிறது. விற்பனை ஆரம்பித்த முதல் நிமிடத்தில் இருந்தே ஐ போன் பற்றிய செய்திகள் ட்விட்டர், பேஸ்புக் தளங்களில் பிரபலம் அடைந்தது. அதில் குறிப்பிட தகுந்த செய்திகள் இரண்டு. ஒன்று ஐ போன் 6 யை முதல் முதலாக கையில் வாங்கியவர், அதை பிரிக்கும் போது கீழே போட்டு உடைத்தது, மற்றொன்று ஐ போன் வலிமை தன்மை பற்றியது. அதாவது  ஐ போன் 6 யை பயன்படுத்தும் போது, அது வளைவதாக கூறுகிறார்கள். இதற்கு ஆப்பிள் நிறுவனம் சார்பில் சில சமாளிப்பு வார்த்தைகள் சொன்னாலும், மக்கள் சமரசம் ஆவது போல் இல்லை.

ஐ போன் 6 இதனிடையே, ஆப்பிளின் போட்டி நிறுவனமான சாம்சங், ஆப்பிள் போன் வளைவது பற்றி கேலி சித்திரம் வெளியிட்டுயுள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி போனாலும், ஐ போன் 6 வாங்குபவர்களின், ஆர்வம் மட்டும் குறைந்தபாடில்லை. எப்படியாவது ஐ போன் 6 வாங்கியே ஆகவேண்டும் என்று பலர் கங்கணம் கட்டி கொண்டு அக்டோபர் 17 ம் ( இந்தியா மற்றும் சீனா வெளியீடு ) தேதிக்காக  அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

ப்ளிப்கர்ட், அமேசான், இபே தளங்களில் இப்பவே முன்பதிவு ஆரம்பித்துவிட்டது. ஆகவே ஐ போன் 6 வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் முன்பதிவு  செய்துகொள்வது நல்லது.

ஐ போன் 6 முன்பதிவு செய்ய  

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.