Home » பொதுவானவை » கடலுக்குள் ஒரு வீடு வாங்கலாம்
கடலுக்குள் ஒரு வீடு வாங்கலாம்

கடலுக்குள் ஒரு வீடு வாங்கலாம்

சென்னைக்கு மிக அருகில் என்று சொன்ன நாட்கள் போய்,  இனி கடலுக்குள்  மிக அருகில் எங்கள் வீடு என்று சொல்லும் நாட்கள் வரலாம். 

துபாய் நிறுவனமான க்லேண்டேன்ஸ்ட், தற்போது ஐரோப்பாவின் இதயம் என்ற பெயரில் கடலுக்கடியில் சொகுசு பங்களாக்களை  கட்டி 2017 ஆண்டு விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கடலுக்கடியில் வீடா என நாம் வாய் பிளந்தாலும், காசு உள்ள மக்கள் இந்த வீட்டை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி, இந்த நிறுவனத்தின் வாயிலில் கியீவில் நிற்பது குறிப்படத்தக்கது.

மூன்று அடுக்குகளை கொண்ட இந்த கடல் வீட்டில் இரண்டு அடுக்கு நீருக்குள்ளும், ஒரு அடுக்கு நீருக்கு மேலும் இருக்கும்.  முதல் அடுக்கில் சூரிய குளியல் எடுத்து கொள்ளும் இடமும், இரண்டாவது தளத்தில் படுக்கை அறையும், கழிவறையும்,  மூன்றாவது தளத்தில் சமையலறை, உணவு உண்ணும் அறை, ஹால் போன்றவை  இடம் பெற்றிருக்கும்.

1700 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டின் விலை, இந்திய ரூபாய் மதிப்பில், சென்னையில் வீடு வாங்குவதை விட கொஞ்சம் கம்மிதான். எவ்வளோனு .. கேக்குறீங்களா??.. பெருசா ஏதும் இல்லைங்க .. 6 கோடிதான் !

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.