Home » மொபைல் » ஐயப்ப பக்தர்களுக்கு புதிய மொபைல் ஆப் அறிமுகம்
ஐயப்ப பக்தர்களுக்கு புதிய மொபைல் ஆப் அறிமுகம்

ஐயப்ப பக்தர்களுக்கு புதிய மொபைல் ஆப் அறிமுகம்

இன்று ஸ்மார்ட் போன், இணையம் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆப்ஸ் என்று சொல்லப்படுகின்ற மொபைல் அப்ளிகேஷன்கள் இப்போது வெகு பிரபலமாக உருவாகிவருகிறது.

இதன் அடிப்படையில் ரயில்யாத்ரி இணையதளம், தென்னக ரயில் நிறுவனத்துடன் இணைந்து சபரிமலை ஐய்யப்பன் பக்தர்களுக்காக புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன்கள் மூலம் நீங்கள் ரயில் முன்பதிவு, இருக்கை விபரம், ரயில் புறப்பாடு மற்றும் வந்து சேரும் நேரம் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.

ரயில் நிலையங்களில் இருந்து பம்பா செல்வதற்கு காரில் செல்ல நீங்கள் விரும்பினால், அதையும் இந்த ஆப் மூலம் சுலபமாக செய்யலாம் என்று கூறுகிறார், மனிஷ் ரத்தி- ரயில் யாத்ரி இந்தியா நிறுவனர். இந்த ஆப் பயனாளிகளுக்கு, அவ்வபோது சபரிமலை குறித்த முக்கிய தகவல்கள் பகிரப்படும் என்பது கூடுதல் தகவல்.

www.railyatri.in – இந்த தளத்திற்கு சென்று நேரடியாக தரவிறக்கி கொள்ளலாம் அல்லது  

http://bit.ly/RYSabarimala

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.