Home » கணினி » பிரபலம் அடையும் செல்பி கேமராக்கள்
பிரபலம் அடையும் செல்பி கேமராக்கள்

பிரபலம் அடையும் செல்பி கேமராக்கள்

செல்பி என்ற புகைப்பட முறை நமக்கு சில ஆண்டுகளாக தான் தெரியும் என்றாலும், தற்போது திரை பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, அதிகமாக விரும்பப்படும் ஒரு புகைப்பட முறை என்று சொல்லலாம்.

திருமண நிகழ்ச்சி, பிறந்த நாள் விழாக்கள், விருந்து போன்றவைகளுக்கு யார் சென்றாலும், உடனே எல்லோரும் சேர்ந்து ஒரு “செல்பி” எடுத்து சமுக வலை தளங்களில் பரப்பிவிடுகிறார்கள்.

இந்த செல்பி ஆர்வத்தை பார்த்த, சாம்சங் மற்றும் சோனி நிறுவனங்கள் தற்போது, செல்பி படங்கள் எடுப்பதர்கென்று பிரத்தியோகமாக, சாம்சங் NX மினி செல்பி, சோனி RX 100 III செல்பி வகைகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் NX மினி செல்பி

Selfie Camera

20.5 மெகா பிக்செல் திறன் உள்ள கேமரா, செல்பி எடுக்கும் போது, நம் முகத்தின் அமைப்பை சரியாக பார்த்து எடுக்க 3 இன்ச் முன்புற டிஸ்ப்ளே, செல்பி எடுத்ததும், அதை சமுக தளங்களில் பகிர ஏதுவாக Wi-Fi, NFC போன்ற வசதிகள் இதில் உள்ளது.

 

 சோனி RX 100 III

sony selfieசாம்சங் NX மினி செல்பியில் உள்ள எல்லா வசதிகளும் இதில் உள்ளது, கூடுதலாக இதில் செல்பி எடுக்க பயன்படும் முன்புற டிஸ்ப்ளேயை 180 டிகிரி திருப்பிக்கொள்ளமுடியும். கூடவே நம்மை சுற்றியுள்ள பகுதிகளையும் அழகாக இதன் திறன்மிக்க லென்ஸ் மூலம் எடுக்க முடியும்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.