Home » மொபைல் » செல்போன் பயனாளிகளுக்கு தனி வழி
செல்போன் பயனாளிகளுக்கு தனி வழி

செல்போன் பயனாளிகளுக்கு தனி வழி

இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செல்போன் ஒன்றையே மூச்சாக கருதி, அதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். அதிலும் செல்போனை கையில் எடுத்தால், ரோடு,மேடு,காடு என்று கூட பார்க்காமல் செல்போனை பயன்படுத்திகொண்டு போய், கீழே விழுந்து மூக்குடைந்தவர்கள் பல பேர்.

செல்போன் மோகத்தால் நடைபெறும் இந்த விபத்துகளை தவிர்க்க சில வருடங்களுக்கு முன்னே ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன்படி தற்போது சீனா இந்த திட்டத்தை நடைமுறை படுத்தி இருக்கிறது.

ஜாக்கிங் என்ற நகரத்தில் உள்ள பாரினர் வீதியில் “டெக்ஸ்டர்” என்ற 50 மீட்டர் நீளமுள்ள பாதையை உருவாக்கி, அதில் பாதியை செல்போன் பயன்படுத்திகொண்டே நடப்பவர்களுக்கும், மீதியை செல்போன் பயன்படுத்தாதவர்களுக்கும் நடப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் செல்போன் பயன்படுத்தாதவர் பாதைக்குள், செல்போன் பயன்படுத்துகிறவர் நுழைந்தால், எச்சரிக்கை தரும் வசதியும் இதில் உள்ளது.

இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதால், இதை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.