Home » வர்த்தகம் » டப்பாவாளாக்களுடன் கைகோர்க்கும் ப்ளிப்கார்ட்
டப்பாவாளாக்களுடன் கைகோர்க்கும் ப்ளிப்கார்ட்

டப்பாவாளாக்களுடன் கைகோர்க்கும் ப்ளிப்கார்ட்

மின்வணிக தள ஜாம்பவான், ப்ளிப்கார்ட் அவ்வப்போது போட்டி நிறுவனங்களை சமாளிக்க எதாவது ஒரு புது முயற்சியை / வசதியை   தனக்குள் புகுத்தி கொள்வது வழக்கம். அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மொபைல் இணையதளங்களுக்கு மூடு விழா கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.  

அதுபோலவே, தற்போது பொருட்களை விரைவாக விநியோகம் செய்ய, மும்பை டப்பாவாளாகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

யார் இந்த டப்பாவாளாக்கள்

மும்பை நகரம் எப்போதும் ஜன நெரிசலிலும், வாகன நெரிசலிலும் அலைமோதிக்கொள்ளும் நகரம். மும்பை நகரில் அன்றாடம் வேலைக்கு செல்லும் ஒருவர் மதியம், கிடைக்கும் ஒரு மணி நேர இடைவெளியில் வீட்டிற்க்கு வந்து உணவருந்தி விட்டு செல்வதெல்லாம் முடியாத கதை. இங்கே தான் இந்த டப்பா வாளாக்கள் என்று அழைக்கப்படும் உணவு விநியோகம் செய்யும் நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

வீட்டிலிருக்கும் நபர் ஒருவர் , வேலைக்கு சென்றிருக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்  ஒருவருக்கு சமைத்துகொடுக்கும் உணவை ஒரு மணி நேரத்திற்குள் சுட சுட குறிப்பிட்ட அந்த நபரிடம், கொண்டு  போய் சேர்ப்பதுதான் இந்த டப்பா வாளாக்களின் தினசரி வேலை .

ஐந்து பேர் உணவை நம்மிடம் கொடுத்து, விநியோகித்து வர சொன்னாலே கண்டிப்பாக ஒருவருடைய  உணவை  இன்னொருவரிடம் மாற்றி கொடுத்து  பிழை செய்துவிடுவோம். அப்படி இருக்க, ISO தரம் , சிக்ஸ் சிக்மா என்ற அளவில் பிழை ஏதுமின்றி, வெறும் நிற குறியீடு மட்டுமே வைத்துக்கொண்டு உணவை சரியான நேரத்தில், இடத்தில் கொண்டு போய் சேர்ப்பது சவாலான விஷயம்தான்.

5,000 பேர் கொண்ட குழுவாக செயல்படும் இவர்கள், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்ச டப்பாக்களை வினியோகிக்கிறார்கள். அதுவும் எந்த பிழையும் இன்றி ! அப்படியே பிழை ஏற்பட்டாலும் அறுபது லட்ச டப்பாக்களில் ஒரு டப்பா மாறி விநியோகிக்க படலாம் அல்லது கொடுக்கப்படாமல்  போகலாம்.

இவர்களின் துல்லியமான கணக்கீடு, டப்பாக்களை வேகமாக வாடிக்கையாளரிடம் கொண்டு போய் சேர்க்கும் நடைமுறை போன்றவற்றை பார்த்து, ஐ.ஐ.ம் கல்லூரி இவர்களை , தங்கள் மாணவர்களுக்காக பேச அழைத்துள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் அவரது திருமணத்திற்கு இவர்களை அழைத்துள்ளார். இவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள, விர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர், ரிச்சர்ட் இவர்களோடு இணைந்து ஒருநாள் பணியாற்றி இருக்கிறார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த டப்பா வாளாக்கள் பிலிப்கார்ட்டுடன் இணைந்துள்ளது மூலம் இனி பட்டி தொட்டி எங்கும் ப்ளிப்கார்டால் பொருட்களை விநியோகம் செய்யமுடியும்.

சில சவால்கள்

  • டப்பா வாளாக்கள், டப்பாகளை விநியோகம் செய்ய சைக்கிள், ரயில் போன்றவற்றை தான் பயன்படுத்துகிறார்கள். ப்ளிப்கார்ட் பொருட்களை அவர்கள் விநியோகம் செய்யும்போது , ப்ளிப்கார்ட்களின் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை எப்படி தூக்கி செல்வார்கள் என்பது கேள்விக்குறிதான்.
  •  டப்பாக்களை விநியோகம் செய்ய, இது வரை பேப்பர், பேனாக்களை பயன்படுத்தாத இவர்களுக்கு, இது பற்றி பயிற்சியளிக்க போவதாக ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது, அதன் பிறகு, பிலிப்கார்ட் செயலியையும் பயன்படுத்த இவர்களுக்கு கற்று தர போவதாக அறிவித்துள்ளது இந்நிறுவனம்.
  • இதுவரை டப்பா களை மட்டும் கொண்டு போய் சேர்ப்பதில் கவனமாக இருந்த இவர்கள், இனி கூடுதல் வேலையாக ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பொருட்களையும் கொண்டு போய் சேர்ப்பதால் நேர விரயம், பிழை ஏற்படலாம்.

த்ரோன் கொண்டு பொருட்களை விநியோகம் செய்யும் முறையை மற்ற நிறுவனங்கள் யோசித்துகொண்டிருக்க, ப்ளிப்கார்ட்டின் இந்த முயற்சியின் பலனை பொறுத்திருந்து பார்போம்.     

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.