Home » மொபைல் » டெல்லி போலிஸின் புது திட்டம்
டெல்லி போலிஸின் புது திட்டம்

டெல்லி போலிஸின் புது திட்டம்

சாதாரண புகார் கொடுக்ககூட போலீஸ் நிலையம் செல்ல தயங்குபவர்களுக்கும், எளிதாக அனைவரும் புகார் கொடுக்கவும், டெல்லி போலீஸ் ஆன்டுராய்ட் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அப்ளிகேஷன் மூலம் காணாமல் போன பொருட்கள் பற்றி F.I.R பதிவு செய்து, அதற்கான சான்றை உங்கள் மெயிலில் பெற முடியும். சிம் கார்டு, 10,+2 மதிப்பெண் பட்டியல்கள் தொலைந்து போனால், இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் பெயர், தந்தை பெயர், விலாசம் போன்றவைகளை கொடுத்து F.I.R பதிவு செய்து, இதன்  மூலம் காணாமல் போன சான்றிதழ்களின் நகல்களை பெற முடியும். இதற்க்கு நீங்கள் போலீஸ் நிலையம் செல்ல தேவையில்லை .

இந்த சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக  டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 50,000 பேர் வரை இந்த ஆன்டுராய்ட் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அப்ளிகேஷன் மூலம் இதுவரை 5.5 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை குறைந்த நாளில் இந்தளவுக்கு மக்களிடம் வரவேற்பு  பெற்றுள்ளதால், கூடிய விரைவில் வண்டி திருட்டு, மற்ற குற்றங்களையும் ஆன்லைன்ல் பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்வது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

சமுக குற்றங்கள், போலீஸ் விதி முறை மீறல்கள் போன்றவற்றை தெரிவிக்க இந்த நம்பர் 9910641064  மூலம் வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம். இந்த சேவை மூலம் இது வரை 23,000 புகார்கள் பதிவு செய்யபட்டுள்ளது.

இந்த சேவை நம்மூர்களுக்கு அறிமுகம் செய்தால், மிகவும் நன்மை பயக்கும்.

டெல்லி போலீஸ் லாஸ்ட் ரிப்போர்ட்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.