Home » கணினி » ஹாக் செய்யப்பட்டதாக சொல்லி முட்டாள் ஆக்கிய நோட்பாட் ++
ஹாக் செய்யப்பட்டதாக  சொல்லி முட்டாள் ஆக்கிய நோட்பாட் ++

ஹாக் செய்யப்பட்டதாக சொல்லி முட்டாள் ஆக்கிய நோட்பாட் ++

நிரல்கள் எழுதுவதற்காக பயன்படும் நோட் பாட் ++ மென்பொருள் பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம். இணையத்தில் இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை கொண்டு நீங்கள் எந்த நிரல்களை வேண்டுமானாலும் எழுதி, இயக்கி பார்க்க முடியும்.

சில மாதங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பத்திரிக்கையான, சார்லி ஹெப்டோ துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ” ஜீ சூயூஸ் சார்லி  “ என்ற பதிப்பை நோட் பாட் ++ வெளியிட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு அமைப்பை சார்ந்தவர்கள், ஜனவரி 12,2015  நோட் பாட்++ இணையதளத்தை ஹாக் செய்தார்கள்.

இதை எப்படியோ சமாளித்து, ஹாக் செய்யப்பட்டதிலிருந்து நோட் பாட்++ வெளிவந்தது. வெளிவந்ததோடு நில்லாமல்,  ஜீ சூயூஸ் சார்லி  பதிப்பை எங்களால் முடிந்த வரை மீண்டும் பரப்புவோம் என்றும் தனது தளத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்  ஏப்ரல் 2,2015, அன்று நோட் பாட்++ தளத்திற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அதாவது, நோட் பாட்++ தளம் மீண்டும் ஒரு அமைப்பினரால், ஹாக் செய்யப்பட்டுவிட்டது என்று கொட்டை எழுத்தில் முகப்பு பக்கத்தில் எழுதியிருந்தது. ஆனால் உண்மையில் நோட் பாட்++  யாராலும் ஹாக் செய்யப்படவில்லை. சும்மா ! ஒரு விளையாட்டுக்கு முட்டாள் தினத்தை கொண்டாடும் வகையில் தான் செய்தோம் என்று கூலாக சொல்லிவிட்டு,

http://notepad-plus-plus.org/news/april-fools-day-prank-2015.html

அந்த ஹாக் செய்யப்பட்டதாக கூறிய அந்த பக்கத்தையும், தன் தளத்தில் இன்னும் வைத்துள்ளது.

பாக்காதவங்க பாப்பாங்கலாம் ! நல்லா கிளப்புறாங்கையா பீதிய !!!!! 🙂

http://notepad-plus-plus.org/aprilFoolsDay2015/prank.html

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.