Home » மொபைல் » உங்கள் படத்தை கார்டூனாக மாற்ற ஒரு செயலி
உங்கள் படத்தை கார்டூனாக மாற்ற ஒரு செயலி

உங்கள் படத்தை கார்டூனாக மாற்ற ஒரு செயலி

எப்போதும் உங்க சாதாரண படத்தை பார்த்து சலித்து போயிடுச்சா. உங்கள் படங்களை அழகான கார்டூன் வடிவில் மாற்ற ஒரு மொபைல் செயலி இருக்கிறது.

மொமென்ட் கேம் என்ற இந்த மொபைல் செயலி மூலம் உங்கள் படத்தை நீங்கள் அழகான கார்டூன் வடிவ படமாக மாற்றலாம். பெண்கள் என்றால் பார்பி கேர்ள் போல கார்டூன் வடிவில் உங்களை தோன்ற செய்ய வேண்டுமோ அல்லது ஆணாக இருந்தால் பேட் மேன் போல கம்பிரமாக உங்களை தோன்ற செய்ய வேண்டுமோ, உங்கள் மனதுக்கு பிடித்த வகையில் எப்படி வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கார்டூனை உருவாக்கிக்கொள்ளலாம்.

மொமென்ட் கேம் அப்ளிகேஷன்

மொமென்ட் கேம் அப்ளிகேஷன் மூலம் உருவாக்கப்பட்ட கார்டூன்

காதுகள் நீளமாக வேண்டுமா, கண்கள் பெரிதாக தெரிய வேண்டுமா. உள்ளே கொடுக்கபட்டிருக்கும் வடிவமைப்புகளை நீங்கள் தெரிவு செய்வதின் மூலம் உங்கள் படங்களில் அழகிய தோற்றங்களை பெற முடியும். இதை நீங்கள் சமுக வலையில் பகிர நினைத்தாலும் , பகிர்ந்துகொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய : கூகிள் ப்ளேஆப்பிள் போன்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.