Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » வர்த்தகம் » நஷ்டத்தில் ஓடும் பிலிப்கார்ட், அமேசான்,ஸ்நாப் டீல்
நஷ்டத்தில் ஓடும் பிலிப்கார்ட், அமேசான்,ஸ்நாப் டீல்

நஷ்டத்தில் ஓடும் பிலிப்கார்ட், அமேசான்,ஸ்நாப் டீல்

மக்களுக்கு தள்ளுபடிகளை வாரி வழங்குவதில் இவர்கள் போல் வராது, என்று நாம் சந்தோசமாக புகழ்ந்து தள்ளிகொண்டிருந்தாலும், அவர்கள் சந்தோஷபடவில்லையாம். ஏனென்றால் இந்த தீபாவளிக்கு அதிக மக்களை கவர வேண்டுமென எண்ணி ஆப்பர்களை கொடுத்ததால், 1000 கோடி ரூபாய் நஷ்டமாம்.பிக் பில்லியன் டே என்ற பெயரிலும், தீபாவளி 6 நாள் தள்ளுபடி என்ற பெயரிலும் மின் வணிக நிறுவனங்கள்  ஆப்பர்களை அள்ளி வழங்கின. இதில் பிலிப்கார்ட் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான திட்டமிடல் இல்லாமல் பிக் பில்லியன் டேயில் இறங்கியதால், மிஞ்சியது என்னவோ அவமானமும், அவபெயரும் தான். பொருட்கள் கிடைக்காதவர்கள் சரமாரியாக திட்டி தீர்த்தனர்.

snapdeal-diwali

 

இருந்த போதிலும், மனம் தளராத பிலிப்கார்ட் , வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது. தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனம் அக்டோபர் 31 தேதி நிலவரப்படி 400 கோடி ரூபாய் நஷ்டம் என்று பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து அமேசான் 321 கோடி ரூபாயும், ஸ்நாப் டீல் 264 கோடி ரூபாயையும் நஷ்டமாக பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில் அமேசான் இந்தியாவில்  வணிகம் செய்வதை நிறுத்த போவதாக  சில செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன!. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.