Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » வர்த்தகம் » ப்ளிப்கார்ட் மொபைல் போன் தளங்களை மூடியது
ப்ளிப்கார்ட் மொபைல் போன் தளங்களை மூடியது

ப்ளிப்கார்ட் மொபைல் போன் தளங்களை மூடியது

மின்வணிக தளங்களான  ப்லிப்கார்ட், மிந்திர  தங்களுடைய செல்போன் தளங்களை மூடிய விவகாரம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் சூடான விவாத களமாக மாறியுள்ளது .

முன்னதாக, ப்ளிப்கார்ட், மிந்திர நிறுவனங்களின்  70 – 80 சதவீதமான விற்பனை மொபைல் போன் தளங்கள் மூலமாகவே நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த இரு நிறுவனங்கள் எடுத்த இம்முடிவு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

பிலிப்கார்ட், மிந்திர நிறுவன தளங்களை செல்போன்  உலாவி வழியாக பயன்படுத்த முற்பட்டால், தளங்கள் மூடப்பட்டதாக அறிவிப்பு கிடைக்கிறது. செல்போன் தளங்களுக்கு பதிலாக அந்நிறுவனங்களின் செயலியை பயன்படுத்த சொல்லி கூகிள் பிளே ஸ்டோர்க்கு திருப்பிவிடப்படுகிறது . தற்போது ஸ்மார்ட் போன் இணையத்தில் இந்நிறுவன  செயலி (Apps) பயன்பாட்டாளர்களை அதிகரிக்க  இந்நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவு என சொல்லலாம்.

Flipkart-Myntra-Mobile-websites-closed

எதிர்கால ஸ்மார்ட் போன்களின்  இணைய பயன்பாட்டை கருத்தில் கொண்டு செல்போன் இணையதளங்களை மூடுவதாக அறிவித்துள்ள இந்நிறுவனங்கள் எதிர்காலத்தில் இணையதளங்களையும் மூடிவிட்டு செயலி மின்வணிக தளங்களாக மாறக்கூடும் என்பது வல்லுநர்களின் கருத்து.

பிலிப்கார்ட் செயலி இன்ஸ்டால் செய்ய

ஆன்லைன் ஷாப்பிங்கில், பிலிப்கார்ட் நிறுவனம் தொடங்குவதற்கு  முன்பிருந்தே செயல்பட்டு வரும் அமேசான், இ பே, அலிபாபா, பெஸ்ட் பை, வால்மார்ட்  போன்ற நிறுவனங்கள் கூட தங்களது செல்போன் தளங்களை இன்னும் பராமரித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்தியாவை விட ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்ற நாடுகளில் அதிகம். அப்படி  இருக்க இன்னும் அவர்களே இது போன்ற முடிவை எடுக்கவில்லை.

படிங்க : ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது சிறந்ததா

இதன் பிரதிபலனை இன்னும் சில காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பிலிப்கார்ட் செயலி இன்ஸ்டால் செய்ய

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.