Home » கணினி » உலகில் முதன்முதலாக உருவாக்கபட்ட இணையதளம்
உலகில் முதன்முதலாக உருவாக்கபட்ட இணையதளம்

உலகில் முதன்முதலாக உருவாக்கபட்ட இணையதளம்

நீங்கள் எத்தனையோ இணையதளங்களை பார்த்திருக்கலாம், ஆனால் இணையதளம் என்ற ஒரு விஷயம் உலகிற்கு அறிமுகமான போது , முதன் முதலாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டிர்கள்.   

டிம் பெர்னஸ் லீ

டிம் பெர்னஸ் லீ

இணையத்தளம் என்ற ஒன்றை நாம் பயன்படுத்தி பல பெரிய விசயங்களை நம்மால் செய்ய முடியும் என்று இந்த உலகத்திற்கு உணர்த்தியவர் டிம் பெர்னஸ் லீ, இவர் அப்போது செர்ன் ஆராய்ச்சிகூடத்தில் பணியாற்றிகொண்டிருந்தார்.

1989 ஆண்டு டிம் பெர்னஸ் லீ, இணையதளம்  பற்றி மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். அவர்களும் சம்மதிக்க, உலகின் முதலாவது இணையதளத்தை  HTML- யை கொண்டு செர்ன் ஆராய்ச்சிகூடத்திற்காக  உருவாக்கினர். உலகின் முதலாவது இணையதளத்தை உருவாக்க டிம் பெர்னஸ் லீ NeXT என்னும் கணினியை பயன்படுத்தினார். இந்த NeXT கணினிகள், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்ன் நிறுவனம் தயாரித்ததாகவும்.

உலகின் முதலாவதாக உருவாக்க பட்ட இணையதளம்

டிம் பெர்ன்ஸ் லீ பயன்படுத்திய NeXT கணினி

இதன் பின்னர், உலகின் முதலாவதாக உருவாக்கபட்ட இணையதளம்  1991 ம் ஆண்டு உலகுக்கு அறிமுகமாகியது.

முதலாவதாக உருவாக்கபட்ட இணையதளத்தை காண

டிம் பெர்னஸ் லீ பற்றி அறிய

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.