Home » வர்த்தகம் » யாஹூ உடன் கைகோர்க்கும் பிலிப்கார்ட்
யாஹூ உடன் கைகோர்க்கும் பிலிப்கார்ட்

யாஹூ உடன் கைகோர்க்கும் பிலிப்கார்ட்

இந்தியாவின் மின் வணிக தளமான ப்ளிப்கார்ட் , சர்ச் என்ஜின் யாஹூ உடன் கைகோர்த்துள்ளது. யாகூவின் இந்திய தளத்திற்கு சென்றால் ஷாப்பிங் என்று ஒரு தனி பிரிவு உருவாக்கபட்டிருக்கும் .

யாஹூ| பிலிப் கார்ட் தளம் செல்க

யாகூவின் இந்திய தளத்தில் உள்ள ஷாப்பிங் பிரிவை நீங்கள் கிளிக் செய்தால், அது நேரே உங்களை பிலிப் கார்ட் தளத்திற்கு அழைத்து செல்லும், யாஹூ மூலம் நீங்கள் பிலிப் கார்ட் தளத்தில் சென்றால், வயொலெட் நிறத்தில் பிலிப் கார்ட்டை நீங்கள் காணலாம். இது பற்றி யாஹூவின் நிர்வாக இயக்குனர் தெரிவிக்கையில்,  “எங்கள் தளத்திற்கு வரும் வாடிக்கையர்கள் சுலபமாக ஷாப்பிங் செய்வதற்கு ஏதுவாக எங்கள் புது முயற்சி” என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு மாதத்திற்கு  115 மில்லியன் வாடிக்கையாளர்கள் யாஹூ இந்தியா தளத்தை பயன்படுத்துகிறார்கள், யாஹூ தனது உறுப்பினர்களை பிலிப் கார்ட் நிறுவனத்திற்கு ஷாப்பிங் செய்ய பரிந்துரைப்பதன் பேரில் யாஹூவும், யாஹூ உறுப்பினர்கள் பிலிப் கார்ட்டில் ஷாப்பிங் செய்வதாலும் இந்த இரண்டு நிறுவனங்களும் லாபம் பெரும்.

yebhi-payment-page

இந்த இரு ஜாம்பவான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்க்கு முன்னர் ஐ.ஆர்.சி.டி.சி யுடன், மின் வணிக நிறுவனமான எப்பியின் (Yebhi) இது போன்ற கூட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.