Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » லேப்டாப் பரிசளித்த ஆபாச இணையதளம்
லேப்டாப் பரிசளித்த ஆபாச இணையதளம்

லேப்டாப் பரிசளித்த ஆபாச இணையதளம்

இப்போதெல்லாம், இணையத்தில் சுவராசியத்திற்கு பஞ்சமே இல்லை. அன்றாடம் எதாவது ஒரு சம்பவம் உலகில் எதோ ஒரு மூலையில் நடந்து, சமுக வலை மூலம் நொடியில் பறந்து, விரிந்து அனைவரையும் சென்றடைந்து விடுகிறது . அந்த வரிசையில்    டென்சல் மைக்கல், என்பவர் கடந்த சில நாட்களாகவே பிரபலமாகி கொண்டிருக்கிறார். அதுவும் வீர தீர செயல்கள் எதுவும் புரிந்து அல்ல. ஆபாச படம் பார்த்து .

ஆபாச படம் பார்த்தா ? . ஆம்.  மைக்கல் ஒருநாள், தனது லேப்டாப்பில் மூலம் குறிப்பிட்ட ஒரு இணையதளத்தில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து அவரது அம்மா அவர் அறை நோக்கி வரும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே என்ன செய்வது என தெரியாமல், அந்த குறிப்பிட்ட இணையதளத்தை மூட முயற்சி செய்துள்ளார்.  வழக்கம் போல தளம் மூடுவது போல் தெரியவில்லை. அதனால் மைக்கல், சற்றும் தாமதிக்காமல்  தனது லேப்டாப்பின் திரையை உடைத்துவிட்டார்.

இந்த செய்தியை, தனது உடைந்த லேப்டாப்பின் படத்தோடு போட்டு, ட்விட்டரில் பகிர்ந்தார். இது 13,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டு, இவரை பிரபலம் ஆக்கியது.

இந்த செய்தி கடைசியாக அந்த குறிப்பிட்ட ஆபாச தள நிர்வாகிகளுக்கும் போக, அவர்கள் இவருக்கு இப்போது புதிய லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.

pornhub gifts laptop

இதுபற்றி, எங்களுடைய சிறந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு இந்த பரிசை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அந்த ஆபாச இணையதள நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.