Home » மொபைல் » வாட்ஸ் ஆப் மோகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகள்
வாட்ஸ் ஆப் மோகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகள்

வாட்ஸ் ஆப் மோகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகள்

600 மில்லியன்  பயனாளர்களை கொண்ட வாட்ஸ் ஆப் மோகத்தால் இத்தாலி நாட்டில் விவாகரத்து அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இத்தாலியன் வழக்கறிஞர் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், பெரும்பாலான தம்பதிகள் வாட்ஸ் ஆப் குறுந்தகவல்களை ஆதரமாக வைத்துகொண்டு விவாகரத்து கோருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. தங்களிடம் விவாகரத்துக்குகாக கோரும் பல தம்பதிகள், தங்கள் வாழ்கை துணைவரின் மேல் இருந்த நம்பிக்கையை இழந்ததற்கு காரணமாக சமுக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் செய்திகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இது போல் இங்கிலாந்தில் கடந்த 2012 ம் ஆண்டு எடுத்த ஆய்வு முடிவுகளும் இதே கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று வளர்ந்து வரும் சமுக வலை தளங்கள் பல நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும், கடைசியில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன.அதற்காக வளர்ந்து தொழில்நுட்பபதை பயன்படுத்தாமல் புறக்கணித்து ஒதுக்குவது சரியாகிவிடாது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.