Home » மொபைல் » சிறந்த 25 ஸ்மார்ட் ஃபோனுக்கான ஆன்டி வைரஸ்கள்
சிறந்த 25 ஸ்மார்ட் ஃபோனுக்கான ஆன்டி வைரஸ்கள்

சிறந்த 25 ஸ்மார்ட் ஃபோனுக்கான ஆன்டி வைரஸ்கள்

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகளவு பெருகி விட்ட காரணத்தினால் இன்று பெரும்பாலும் ஆன்லைனில் செய்ய கூடிய அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட் போனிலயே முடித்துக்கொள்கிறோம். பொதுவாக ஆன்லைனில் வேலை செய்யும் அனைவருக்கும் வைரஸ் பற்றிய பயம் இருக்கும். குறிப்பாக பணம் பரிவர்த்தனைகள் செய்யும் போது இதை நீங்களே உணர்ந்து இருப்பீர்கள்.

அதற்காக சிறந்த 25 ஸ்மார்ட் ஃபோனுக்கான ஆன்டி வைரஸ்களை தேர்ந்தெடுத்து கீழே கொடுத்துள்ளேன். இவையனைத்தும், பல வைரஸ்களின் மாதிரிகளை செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டது. இதனின் பாதுகாப்பு திறன்படியே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை பிட் டிபென்டர் பிடித்துள்ளது.

Best-android-Antivirus-ranking

அட என்னங்க.. இதுவரைக்கும் மொபைல்ல போட்ட ஆன்டி வைரஸ்கள் ஒன்றுகூட ஒரு வைரச கூட பிடிச்சதில்ல என்று நீங்கள் நினைக்கலாம்.

இருப்பினும், ஸ்மார்ட் போனுக்கு ஆன்டி வைரஸ் அவசியம் தேவை, ஆன்டி வைரஸ்கள் ,வைரஸ்களை தடுக்கவில்லை என்று நீங்கள் நினைத்தாலும் (உண்மையில் அது போல் இல்லை) , தவறான இணையதளங்களுக்கு நீங்கள் செல்லும் போது அதை சுட்டிக்காட்டவும், நீங்கள் பாதுகாக்க விரும்பும் ஆப்ஸ், மெமரி கார்டு, மெசேஜ் போன்றவைகளை லாக் செய்யவும், இதில் உச்சகட்டமாக உங்க மொபைல் தொலைந்து போனால் அது எங்கிருக்கிறது என்றும் ட்ராக் செய்யவோ அல்லது உங்கள் போனை திருடியவர் வேறு ஒரு சிம் கார்டை போடும் போது அது பற்றி உங்களுக்கு தகவல் கொடுக்க பயன்படுகிறது.

அதனால் தவறாமல் எதாவது ஒரு சிறந்த ஆன்டி வைரஸ் மென்பொருளை உங்கள் ஸ்மார்ட் போனில் வைத்துக் கொண்டால் நல்லது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.