Home » கணினி » உங்கள் இன்டர்நெட் செலவை மிச்சப்படுத்த 4 வழிகள்
உங்கள் இன்டர்நெட் செலவை மிச்சப்படுத்த 4 வழிகள்

உங்கள் இன்டர்நெட் செலவை மிச்சப்படுத்த 4 வழிகள்

இன்று எல்லோருக்கும் இன்டர்நெட் தேவைப்படுகிறது. வீட்டில் குழந்தைகள் பாடம் படிக்க, தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்ய, ஆன்லைன் ஷாப்பிங் என்று இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. ஆனால் இதற்காக நாம் மாதந்தோறும் செலுத்தும் ஒரு தொகை சரிதானா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். ஏனெனில் மாதம்தோறும் செலவாகும் 100 ரூபாய் மிச்சம் பிடித்தால் கூட அது வீட்டு செலவிற்கு உதவும்.

சரி கட்டுரைக்குள் பயணிப்போம்.

எவ்வளவு வேண்டுமோ அதை மட்டும் பெறலாம்

இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர் கிடைத்தால் போதும் என்று அன்லிமிடெட் பிளான் இருக்கிறது இதை எடுத்துக்கொள்ளுங்கள் சார் என்று மாயை விரிக்கிறார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். உங்களுக்கு மாதம்தோறும் எவ்வளவு இன்டர்நெட் செலவாகும் என்பதை கணக்கு செய்து அதற்கு தகுந்த பிளான்களை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

சரி. ஒரு வேளை நான் எவ்வளவு இன்டர்நெட் பயன்படுத்துவேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லும் நபராக இருந்தால், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் அன்லிமிடெட் பிளான் வாங்கி பயன்படுத்திப் பாருங்கள். அதில் தோரயமாக நீங்கள் மாதம் தோறும் பயன்படுத்தும் இன்டர்நெட்டின் அளவு தெரியும். (நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்திய அளவின் விபரத்தை இன்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் கொடுக்கின்றன. தரவில்லை எனில் கேட்டு பெறுங்கள்) அல்லது இதற்காக இன்டர்நெட்டில் கிடைக்கும் இலவச மென்பொருட்கள் சிலவற்றையும் நீங்கள் உங்கள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தும் அளவினை தெரிந்துக்கொள்ளலாம். தேவையில்லாமல் அன்லிமிடெட் பிளான் வாங்கிக்கொண்டு பணத்தை வீணாக்க வேண்டாம்.

இலவச மென்பொருள் தரவிறக்கம்

இணையத்தில் கிடைக்கும் இந்த இலவச கால்குலேட்டரில் நீங்கள் பயன்படுத்தும் அளவினை கொடுத்தால், நீங்கள் மாதம் தோறும் பயன்படுத்தும் இன்டர்நெட் அளவின் விபரம் தெரிய வரும்

http://www.cableone.net/Docs/datacalculator.html

அதிகமான வேகம் பர்ஸுக்கு ஆபத்து

நான் 4 Mbps ஸ்பீட் தரேன். நான் 13Mbps ஸ்பீட் தரேன் என்று யாராவது உங்களை அணுகினால், முதலில் அவர்கள் சொல்வது உன்மைதானா என்று சோதித்து பாருங்கள். அதோடு அவ்வளவு வேகம் உங்களுக்கு அவசியமா என்றும் பார்க்க வேண்டும். சாதாரணமாக வீட்டில் இணையதளங்களை பார்ப்பதற்கும், பேஸ்புக், ட்விட்டர், ஈமெயில், ஸ்கைப், யூ டுயுப் படங்களை பார்ப்பதற்கும் 512 Kbps இன்டர்நெட் வேகம் போதும். இதை விடுத்து அதிகமான வேகத்திற்கு ஆசைப்பட்டால் உங்கள் பர்ஸுக்குதான் ஆபத்து. அதே போன்று வீட்டில் அல்லது அலுவலகத்தில் இரண்டு கணினிகளை இயக்கி ஒரே சமயத்தில் இணையத்தில் பணிபுரிந்தால் கொஞ்சம் அதிகமான ஸ்பீட் வாங்கிக்கொள்ளலாம்.

அதோடு இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள் சொல்லும் ஸ்பீட் உங்கள் வீட்டில் அலுவலகத்தில் கிடைக்கிறதா என்பதை இங்கு சென்று சோதித்து பார்க்கலாம். http://www.speedtest.net/

தள்ளுபடிகள் கேட்பது தப்பில்லை

அரசு இன்டர்நெட் நிறுவனங்கள் தவிர்த்து, தனியார் இணைய சேவை அளிக்கும் நிறுவனங்களில் தள்ளுபடிகள் கேட்கலாம். நீங்கள் ஒரு அலுவலகம் நடத்துகிறீர் என்று வைத்துக்கொண்டால், அதற்கு வருடம் தோறும் இன்டர்நெட் சேவை பெறுவதற்கு ஒரு பெரும் தொகையை செலவழிப்பீர். அவ்வேளையில் உங்கள் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்திடம் தள்ளுபடிகள் கேட்கலாம். அல்லது அந்த நிறுவனம் இவ்வளவுக்கு சிறந்த ஆப்பர்களை வழங்குகிறது, நீங்கள் எதாவது தள்ளுபடி கொடுத்தால், உங்களிடமே தொடர விரும்புகிறோம் என்று சும்மா சொல்லிப்பாருங்கள். நிச்சயம் தள்ளுபடி கிடைக்கும்.

காம்போ சேவைகளை பெறலாமே

ஒன்று ஒன்றுக்கும் தனித் தனியாக பணம் செலுத்தாமல், காம்போ சேவைகளை பெறலாம். உதாரணமாக பீ.எஸ்.என்.எல் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட இன்டர்நெட் பிளானை பெறும்போது, இலவச டெலிபோன் கால்களை வழங்குகிறது. அதன் மூலம் நீங்கள் தனியாக போன் பேசியதற்கு என்று ஒரு தொகை செலுத்த தேவையில்லை அல்லவா?. இது போன்று எல்லா நிறுவனங்களும் அவர்களுக்கு உரிதான சில காம்போக்களை அறிமுகம் செய்யும் போது நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தயவு செய்து இந்த கட்டுரைக்கு உங்கள் கமெண்ட்களை கீழே பதிவு செய்யுங்கள். அது மேலும் இது போன்று எழுத தூண்டுதல் புரியும்.

மற்றவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள், நிச்சயம் உதவியாக இருக்கும்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.