Home » மொபைல் » ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்
ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

ஸ்மார்ட் போன் வாங்கும் போது, கவனிக்க வேண்டிய விசயங்களில் முக்கியமானது, பேட்டரி திறன். நாம் பல பேர் கடைக்கு போனாலும் சரி, ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ணாலும் சரி பேட்டரி திறன் பற்றி பெரிதாக யோசிக்காமல் போன் பார்க்க நன்றாக இருந்தால் உடனே வாங்கிவிடுகிறோம். அதற்காக இது நிச்சயம் தவறான செயல். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை.

கொஞ்சம் பார்த்து வாங்கலாமே -என்று சொல்ல வந்தேன். சரி நண்பா! இப்போ நம்ப லிஸ்ட பார்க்கலாமா?

  1. Asus ZenFone Max: 5000mAh

Asus-Zenfone-Max

தற்போது ஆசுஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் போன் இது. இந்த போனில் உள்ள 5000mAh பேட்டரியை கொண்டு  37.6 மணி நேரம் 3G நெட்வொர்க்கில் பேசவும், 32.5 மணி நேரம் வை-பையில் ப்ரௌஸ் செய்யவும், 72.9 மியூசிக் கேட்கவும் முடியுமாம். அதோடு இந்த போன் 5.5-inch HD திரை, 2GB ரேம்கொண்டது. இதில் பின் பக்கம் 13 மெகா பிக்சல் முன்பக்கம் 5  மெகா பிக்சல் கேமராவும் உள்ளது. இந்த போனின் விலை ரூ. 9,999/-.

இந்த போன் வாங்க இங்கே கிளிக் செய்யலாம்.

2. Micromax Canvas Juice 3: 4000mAh

Micromax-Canvas-Juice-3-1024x724

இந்த போனில் 4000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதன் மூலம் 14 மணி நேரம் பேசமுடியும். 5-inch HD திரை, 2GB ரேம் கொண்டது. எல்.ஈ.டி யுடன் கூடிய 8 மற்றும் 2 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது. இந்த போனின் விலை ரூ. 7,386/-

இந்த போன் வாங்க

3. Intex Aqua Power II: 4000mAh

Intex-Aqua-Power-II

Micromax Canvas Juice 3 யை போன்ற பேட்டரி திறன் மற்றும் செயல்பாடு உள்ள இந்த போனில் 5-inch HD, 1GB ரேம் உள்ளது.  பின்புறம் 5 மற்றும் முன்புறம் 2 மெகா பிக்சல் கேமரா கொண்ட இந்த போனின் விலை ரூ.5,900/-

இந்த போன் வாங்க

4. Karbonn Aura 9: 4000mAh

Karbonn-Aura-9

4000mAh திறன் கொண்ட இந்த போனில் 10 மணி நேரம் சார்ஜ் நிற்கும். இதோடு இந்த போனின் மற்ற அம்சங்களாக 5-inch IPS டிஸ்ப்ளே, 1GB ரேம் 8 மற்றும் 2 மெகா பிக்சல் கேமரா உள்ளது. இந்த போனின் விலை ரூ. 4,750/-

இந்த போன் வாங்க

5. Intex Cloud Zest: 4000mAh

Intex-Cloud-Zest

கடைசியாக மிகக்குறைந்த விலையோடு மற்ற போன்களோடு போட்டிபோடும் இந்த போனில் 15 மணி நேரம் வரை சார்ஜ் நீடிக்கும். 5-inch HD, 1GB ரேம் எல்.ஈ.டி யுடன் கூடிய 5 மற்றும் 2 மெகா பிக்சல் கேமரா  திறன் வாய்ந்த இந்த போனின் விலை ரூ. 4,999.

இந்த போன் வாங்க

என்னுடைய பதிவுகளை இலவசமாக பெற subscribe செய்யுங்கள் 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.