Home » மொபைல் » 500 புதிய கிளைகளை துவங்கும் ஆப்பிள்
500 புதிய கிளைகளை துவங்கும் ஆப்பிள்

500 புதிய கிளைகளை துவங்கும் ஆப்பிள்

கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் என்றால் , அது ஆப்பிள்தான் என்று சொல்லும் அளவுக்கு, இன்று உலகெங்கிலும் அனைவரது மனதிலும் இடம்பிடித்திருக்கும் ஆப்பிள், தற்போது இந்தியாவில் கிளைகள் ஆரம்பிப்பது இந்தியாவிற்கான ஒரு அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளலாம்.

தொழில்நுட்ப சாதனங்கள் , இணையம் பயன்படுத்துவதில் முன்னேறி கொண்டிருக்கும் நம் நாட்டில், இது வரை வரலாறில் இல்லாத அளவுக்கு கணினி, செல்போன் சார்ந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க  போட்டி போட்டு கொண்டிருகின்றன.

தற்போது சீன தயாரிப்பு நிறுவனமான சியாமி தனது அனைத்து தயாரிப்புகளையும் இந்தியாவில் இறக்க படாதபாடு பட்டு கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறைந்த விலையில் அதிக வசதிகளை கொண்ட போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஒரு புறம் இருந்தாலும், விலை அதிகமானாலும் பரவாயில்லை ஒரு முறையாவது ஆப்பிள் போனை பயன்படுத்தி பார்த்துடணும் என்று நம் எத்தனை பேருக்கு ஆசை இருக்கும். சென்ற மாதம்  ஐ போன் 6 அறிமுக விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் ஐ போன் வாங்கும் ஆர்வத்தில் முன்தினம் இரவு 12 மணி முதல் கால்கடுக்க நின்றதை யாரும் மறந்து விடமுடியாது.

இப்படி பாவமாக நிற்கும் வாடிக்கையாளர்களை பார்த்து ஐ போன் விற்பனை செய்யும் கடைகள் காலை 4 மணிக்கே விற்பனையை தொடங்கின. ஆனால் இப்போது ஆப்பிள் விரும்பிகள் எல்லோரும் சந்தோஷபடும் வகையில் ஆப்பிள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது . அதாவது பெருநகரங்கள் மட்டுமில்லாது, சிறிய நகரங்களிலும் எங்களது 500 கிளைகளை திறக்கவிருக்கிறோம் என்று.

இந்தியாவில் ஆப்பிள் கிளைகள் தொடங்குவதில் உள்ள சூட்சுமம்

அதிக மக்கள் தொகை கொண்ட நாடு,

இணைய பயன்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முன்னேறி வரும் நாடு,

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிகம் ,

இந்தியாவில் அதிகளவு தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் ஆன்ராய்டு, விண்டோஸ் போன்களுடன் போட்டி போட முடியும்.

இதானால் முன்பு இருந்த தள்ளுமுள்ளுகள் கொஞ்சம் குறையலாம். ( படிங்க : களை கட்டிய ஐ போன் முதல் நாள் விற்பனை )   

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.