Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » என்னை பற்றி

என்னை பற்றி

முதலில் என் இணையதளத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி !

Gunaseelan- tamilexplorerநான் குணசீலன், இந்த இணையதளத்தை இயக்கி கொண்டிருப்பவன்.

இணையம், இணையதளம் ஒரு மனிதனின் வாழ்கையை புரட்டி போடும் சக்தி மிகுந்த களம். இந்த களத்தில் அனைவரும் கலந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்டதுதான்,  Techguna.com

இந்த  இணையதளத்தை 2013- ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கினேன். நம் தமிழ் மக்களுக்கு எதோ நம்மால் முடிந்தனவற்றை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இணையதளத்தை நான் துவக்கும்போது எண்ணற்ற தடை கற்களை உடைத்தெறிந்து தாண்டிவர வேண்டியிருந்தது.

இதில் முதலாவதாக, பணம் ஒரு மிகப்பெரிய சோதனை, கையில் 10,000/- மட்டும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்துக்கொண்டு, ஒரு தனியார் வெப் டிசைனிங் நிறுவனத்தை அணுகினேன். முதலில் என் இணையதளம் எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற விஷயங்களை கூர்மையாக கேட்டுக்கொண்டிருந்த அவர்கள், நீங்க சொல்ற எல்லாத்தையும் 20,000/- கொடுத்தால் செய்துவிடலாம் என்று வாக்குறுதி கொடுத்தனர். கடைசியில் பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்கள் ஒழுங்காக எதுவும் செய்யவில்லை.

நான் சொன்னது வேறு அவர்கள் செய்தது வேறு, கடைசியில் நீங்க இதெல்லாம் சொல்லவே இல்லை என்று சொல்லி பழி அனைத்தும் என் பேரில் தூக்கி போட்டனர். சரி இனிமே இந்த விடுபட்ட வசதிகளை செய்ய எவ்வளவு செலவாகும் என நான் கேட்க, இன்னொரு 20,000/- கொடுத்தால் எல்லாத்தையும் முடித்துவிடுகிறோம் என சொன்ன, அவர்களை இனியும் நம்ப நான் முட்டாள் இல்லை.

இதன் பின்பு இணையதளமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்றிருந்த,  என்ற என் எண்ணத்தினை மாற்றி போட்டது, 2014 ல் நான் படித்த ஒரு புத்தகம்தான்.

தற்போது, இந்த Techguna.com இணையதளத்திற்கு உலகம் முழுதும் இருந்து பார்வையாளர்கள் வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவிற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, அமெரிக்கா, ஸ்ரீ லங்கா போன்ற நாடுகள் குறிப்பிடத்தகுந்தவை.

நர்மதா பதிப்பகத்திற்காக ” வேர்ட் பிரஸ் மூலம் இணையதளம் வடிவமைக்கலாம்”[  வேர்ட் பிரஸ் கற்றுக்கொள்ள வேண்டுமா ] என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். தற்போது புத்தகம் நர்மதா பதிப்பகத்தின் இணையதளம் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து புத்தக நிலையங்களிலும் கிடைக்கிறது.

புத்தகத்தை இந்த தளத்திலயே வாங்க இங்கே கிளிக் செய்க

அவ்வபோது தொழில்நுட்பம், மொபைல், பொது செய்திகள் போன்ற செய்திகளை படிக்க என் இணையதளத்திற்கு வருகை புரியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் என் இணையதளம் பற்றி சொல்லுங்கள்.

கணினி, இணையத்தளம் தொடங்குவது, கல்வி ஆலோசனைகள் பெறுவது போன்ற  அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் மற்ற  விஷயங்கள் தொடர்பாக என்னை நீங்கள் தொடர்புகொள்ள நினைத்தால் inboxmeguna@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு உங்கள் செல்போன் எண்ணுடன் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

அல்லது 8189919372 என்ற, இந்த எண்ணிலும் என்னை தொடர்புகொள்ளலாம்.