Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » ஆதார் லாக்கர் ( சிறப்பு பகிர்வு )
ஆதார் லாக்கர் ( சிறப்பு பகிர்வு )

ஆதார் லாக்கர் ( சிறப்பு பகிர்வு )

ஆதார் கார்டு என்று சொல்லப்படும் தனிமனித அடையாள அட்டை திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டதில் இருந்து பெரிய பிரச்சனைதான். இந்த அட்டை வேண்டுமா? வேண்டாமா ? அல்லது இந்த அட்டையின் பயன்தான் என்ன என்பது பல நாள் வரைக்கும் (ஏன் இன்றுமே) புரியவில்லை.

மானிய விலையில் எல்.பீ.ஜீ வழங்கும் திட்டத்திற்காகவும் மற்ற சில அரசாங்க சலுகைகளுக்காகவும் தற்போது இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகிறோம்.

இந்த ஆதார் அட்டையின் பயன்பாடு இதுமட்டும்தானா என்றால்? இல்லை மற்றும்மொரு வசதியும் இருக்கிறது. அதுதான். டிஜீ லாக்கர். ஆதார் அட்டையை அடையாளமாக கொண்டு, கணக்கு தொடங்கி தங்களுடைய டாகுமென்ட்களை இணையத்தில் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி.

பிரதமர். நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எப்படி கணக்கு தொடங்குவது ?

முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் http://digitallocker.gov.in/

பிறகு உங்கள் ஆதார் அட்டையின் எண்ணையும், கீழ் பெட்டியில் காட்டப்படும்  எழுத்துகளையும்  பதிவு செய்யுங்கள்.

aadhar locker

 

 

 

 

 

 

பின், உங்கள் அலைபேசிக்கு மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு  ஒருமுறை கடவுச்சொல் அனுப்பிவைக்கப்படும்.

Digital-locker-Signin

 

 

 

 

 

 

இப்போது மேலே உள்ளது போல் உங்களுக்கு ஒரு பெட்டி காண்பிக்கப்படும். அதில் உங்கள் அலைபேசிக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை தட்டச்சு செய்து “Validate OTP” என்று கொடுத்தால் போதும், உங்கள் டிஜீ லாக்கர் தொடங்கப்பட்டதாகிவிட்டது.

இதில் என்ன சேமிக்க முடியும்?

இதில் உங்கள் பான் கார்டு, பாஸ்போர்ட், பள்ளி கல்லூரி தேர்வு மதிப்பெண் அட்டைகள், ஓட்டுனர் உரிமம்,டெலிபோன் பில், வீட்டு வாடகை ரசிது, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், போன்றவற்றை மட்டுமே சேமிக்கமுடியும். இவற்றையெல்லாம் சேமிக்க உங்களுக்கென 10 எம்.பீ மட்டுமே ஒதுக்கபட்டிருக்கும்.

இதில் சேமிப்பது பாதுகாப்பானதா?

தற்போது இந்த சந்தேகம் எல்லோருக்கும் உள்ளது. இருந்தாலும் இந்த டிஜீ லாக்கர் திட்டத்தில் பயன்படுத்தபடும் தொழில்நுட்பம் இன்டர்நெட் பாங்கிங் வகையை சார்ந்தது. ஒவ்வொரு முறையும் உங்கள்  டிஜீ லாக்கர் கணக்கினுள் நுழைய உங்கள் அலைபேசிக்கு அனுப்பபடும் கடவுச்சொல்லை பதிய வேண்டும். அதனால் கொஞ்சம் பாதுகாப்பானது என்று சொல்லலாம்.

எல்லோரும் பயன்படுத்த முடியும்?

ஆதார் கார்டு வைத்திருக்கும் எல்லோரும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் எங்காவது வெளியூர்களுக்கு இன்டர்வியூ செல்லும்போது ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து செல்ல தேவை இருக்காது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.