Home » மொபைல் » இப்போ உங்க ஸ்மார்ட் போன்லயே படம் எடுத்து எடிட் செய்ய முடியும்
இப்போ உங்க ஸ்மார்ட் போன்லயே படம் எடுத்து எடிட் செய்ய முடியும்

இப்போ உங்க ஸ்மார்ட் போன்லயே படம் எடுத்து எடிட் செய்ய முடியும்

ஸ்மார்ட் போன்களில் இன்று சிறிய பார்ட்டி முதல் கல்யாணம், காதுகுத்து வரை படம் பிடித்து விட முடியும். இதற்கு காரணம் திறன் வாய்ந்த கேமரா, இலகுவான பயன்பாடு போன்றவைகளை சொல்லலாம். சரி ஒரு பக்கம் ஷூட்டிங் வேலைகளை முடித்துவிட்டாலும், எடிட்டிங் வேலைகளை செய்ய என்ன செய்வது.

இதற்கான ஒரு செயலிதான் “வீடியோ எடிட்டர்” . ஆன்ட்ராய்டு செயலியான இதில், உங்கள் விருப்பம் போல் எடுத்த படத்தினை, எப்படி வேண்டுமானாலும் எடிட் செய்ய முடியும். குறிப்பாக படங்களுக்கு பின்னணி இசை சேர்ப்பது, தேவையில்லாத இடங்களை வெட்டி எடுப்பது, ஃபில்டர்களைப் பயன்படுத்துவது போன்றவைகளை இந்த செயலி மூலம் சுலபமாக செய்து விட முடிகிறது.

காட்சி படங்களில் தேவையான இடங்களில் கேளிக்கை ஸ்டிக்கர்களும் பயன்படுத்தலாம். அதோடு எடிட் செய்த படத்தினை பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடுயுப் போன்ற சமூக வலைகளிலும் பதிவேற்றம் செய்யலாம். குறும்படங்கள் எடுத்து பழகுபவர்கள் அல்லது சிறிய விளம்பர படங்கள் எடுக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த செயலி நிச்சயம் உதவியாக இருக்கும்.

பயன்படுத்தி பார்த்துவிட்டு, உங்கள் எண்ணங்களை இங்கு பதியுங்கள்.

செயலி தரவிறக்கம் செய்ய: https://goo.gl/hp5trc

மாதம் 50,000 பேர் படிக்கும் எனது பதிவுகளை நீங்களும் இலவசமாக படிக்கலாமே – இங்கு கிளிக் செய்க

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.