Home » கணினி » பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் !
பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் !

பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் !

இன்று பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும், மோகம் அனைவரிடம் வளர்ந்து வருகின்றது. பழைய ஸ்மார்ட் போன், கணினி, ஹார்ட் டிரைவ் என்று பல பொருட்களை விலை குறைவாக வாங்கிவிட முடியும் என்பதால், ஒஎல்எக்ஸ், குயிக்கர் போன்ற தளங்களுக்கு மக்கள் படையெடுப்பது நமக்கெல்லாம் தெரிந்ததே.

ஆனால் பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும்போது, மிக கவனமாக செயல்படுவது அவசியம் ஆகின்றது. விற்பவர் என்ன காரணத்திற்கு வேண்டுமானாலும் அந்த பொருளை விற்கலாம். இருந்தாலும் நீங்களும் ஒரு முறை, இந்த பொருளை நீங்கள் விற்பதற்கான காரணம் என்ன என்று கேட்டு வையுங்கள். அவர் சொல்லும் காரணம் உங்களுக்கு உகந்ததாக இருந்தால் மட்டும் அந்த பொருளை நீங்கள் வாங்கலாம்.

படிங்க : இணையத்தில் கலக்கும் சென்னை ஆட்டோக்காரர்

உதாரணமாக நீங்கள் ஒருவரிடம் பழைய ஸ்மார்ட் போன் ஒன்று வாங்குகிறீர் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவரிடம் எதற்காக இந்த போனை விற்கிறீர் என்று கேட்கும் போது, புது மாடல் போன் ஒன்று வாங்கப் போறேன், அதனால் இதை விற்கிறேன் என்று சொன்னால் பரவாயில்லை. நீங்கள் அந்த போனை வாங்கலாம்.

ஆனால் அதை விட்டு விட்டு, இந்த போனில் பேசும் போது சில நேரங்களில் சரியாக காதில் விழுவதில்லை, கேமரா சரியில்லை என்பது போல் சரியில்லாத காரணங்கள் சொன்னால் அந்த போனை வாங்க வேண்டாம். ஆனால் இப்படி எல்லோரும் போனை விற்பதற்கான உண்மை காரணத்தை சொல்லி விட மாட்டார்கள். சிலர் மட்டும் தெரியாமல் வாய் விட்டு விடுவார்கள்.

படிங்க : எதிர்காலத்தில் பாஸ்வோர்ட் இல்லையாம்? பிறகு எப்படி?

அதே போன்று பழைய பொருட்கள் வாங்கும் போது, கவனிக்க வேண்டிய விஷயம் திருட்டு பொருள். எங்காவது ஒரு பொருளை திருடி அதை, பழைய பொருட்கள் விற்கும் தளங்களில் பதிவேற்றம் செய்து விற்பனை செய்வது தற்சமயம் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு நான் பத்திரிக்கையில் படித்த சம்பவம் இதே போன்றதுதான். ஒரு பெண்ணை கொன்று விட்டு அவர் செல்போனை கொண்டு போய் யாரோ ஒருவரிடம் கொலை செய்தவன் விற்று விட, கடைசியில் போலீஸ் போன் வாங்கிய அந்த அப்பாவியை பிடித்து விசாரித்தது.

படிங்க : ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா?

அதனால் பெரும்பாலும் பழைய பொருட்களை மற்றொரு நபரிடம் இருந்து வாங்கும்போது, அவர் அந்த பொருள் வாங்கியதற்கான ரசீதை கேட்டுப் பெறுங்கள். ரசீது இல்லையென்றால் அவரின் அடையாள அட்டையின் நகலை கேட்டுப் பெறுங்கள். நிச்சயம் குற்றம் இல்லாதவர்கள் அடையாள அட்டை நகலை கொடுப்பார்கள். கொடுக்க முடியாது என்று சொன்னால், உங்கள் பொருள் எனக்கு வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டு வந்து விடுங்கள். இல்லையெனில் நாளை ஏற்படும் பிரச்சினையில் நீங்கள் மாட்டிக்கொள்ள நேரிடலாம்.

அதே போன்று திருட்டு போன்கள் விலை மலிவாக கிடைக்கின்றது என்று தெரிந்தே போய் வாங்க வேண்டாம். நிச்சயம் ஐ.எம்.ஈ.ஐ- யை வைத்து உங்களை போலீசார் பிடித்து விடுவார்கள்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.