Home » கணினி » இணையத்தில் கலக்கும் சென்னை ஆட்டோக்காரர்
இணையத்தில் கலக்கும் சென்னை ஆட்டோக்காரர்

இணையத்தில் கலக்கும் சென்னை ஆட்டோக்காரர்

இருப்பது சென்னை என்றாலும், தனது இணையதளத்தால் உலகையே தனது ஆட்டோவில் பயணிக்க அழைக்கும், இந்த ஆட்டோகாரரின் பெயர், சாம்சன். இவர் சென்னையில் தாஜ் கோரமண்டல் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டான்டில் இருந்து ஆட்டோ ஒட்டி வருகிறார். வழக்கமாக சென்னையை சுற்றிப் பார்க்க வருகை புரியும் வெளி நாட்டினர் எல்லோருக்கும் இவர்தான் ஆட்டோ டிரைவர். எப்படி இதெல்லாம் சாத்தியம்.

samson chennai autoஎப்படி இவரை மட்டும் தேடி பிடிக்கிறார்கள் என்றால், எல்லாம் இவரது இணையதளம் செய்யும் வேலைதான். சாம்சன் தனக்கென தனியாக ஒரு இணையதளம் வைத்திருக்கிறார். அதில் அவர் சென்னையை பற்றிய குறிப்புகளோடு தன்னையும், தன் ஆட்டோவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் சுற்றுல்லா வரும் வெளிநாட்டினர், சென்னை ஆட்டோ சர்வீஸ் என்று கூகுளில் தேடும்போது இவரது இணையதளம் கண்ணில் பட்டு, பயணிகள் இவரை அடைகிறார்கள்.

சுற்றுலா வரும் வெளிநாட்டினரை சென்னையில் எந்த மூலை முடுக்குகளுக்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும் இவர், பாதுகாப்புக்கு 100 சதவீதம் நான் உத்திரவாதம் என்று தனது இணையதளத்தில் சொல்லியிருக்கிறார்.

அது சரி! இணையதளம் எப்படி வடிவமைத்தீர்கள் என்று கேட்கும் போது, அதுவும் தன்னுடைய வெளிநாட்டு பயணியான க்ரிஸ் என்பவர் இந்தியா வந்திருந்த போது, அமைத்துக்கொடுத்ததுதான் என்று சொல்கிறார்.

படிங்க: வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !

படிங்க:வெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை

எது எப்படி இருப்பினும், இணையத்தை கொண்டு நல்ல சேவையளித்து, சாம்சனை போன்ற ஆட்டோகாரர்கள் வாழ்வில் மேலும் வளர வேண்டும்.

சாம்சன் இணையதளம் செல்ல :http://tuktastic.com/

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.