Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » குழந்தை பெற்ற அடுத்த நிமிடமே கேம் விளையாட சென்ற பெண்மணி
குழந்தை பெற்ற அடுத்த நிமிடமே கேம் விளையாட சென்ற பெண்மணி

குழந்தை பெற்ற அடுத்த நிமிடமே கேம் விளையாட சென்ற பெண்மணி

இப்போதெல்லாம் இணையத்தில் வெளியாகும் செய்திகள் பலவும் சுவாரசியமும், ஆச்சரியமும் கலந்ததாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இணைய அடிமைகள் என்ற தலைப்பில் பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். இப்போது அந்த சம்பவத்தை இன்னும் உறுதிபடுத்துவது போல் சீனாவில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இணையத்தில் கேம் விளையாடுவதில் அடிமையாகி போன சீனாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் , வழக்கம் போல கேம் விளையாட இன்டர்நெட் மையத்திற்கு சென்றிருக்கிறார், அங்கு அவருக்கு பிரசவ வலி எடுக்க,  இன்டர்நெட் மையத்தினுள் இருக்கும் கழிவறையில் சென்று தானே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை அழுகுரல் கேட்டு மற்ற இணைய மைய வாடிக்கையாளர்கள் என்ன ஏதென்று பார்க்க, இந்த பெண் கழிவறையில் குழந்தையுடன் இருந்துள்ளார். உடனே குழந்தையும் ,அவரையும் சுத்தப்படுத்திக்கொள்ள கொஞ்சம்  சுடு நீர் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாங்க மறுத்த அவர், குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு, மறுபடி தன் கணினியில் வந்து உட்கார்ந்து கேம் விளையாட ஆரம்பித்துவிட்டாராம்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற இணைய மைய வாடிக்கையாளர்கள், உடனடியாக அம்புலன்சை வரவழைத்து பெண்மணியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர்.

இப்பொது பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

பிரசவம் என்பது, ஒரு தாயுணர்வு , அது என்னவென்று தெரியாத அளவிற்கு மற்றவற்றில் அடிமையாகி கிடப்பதை என்ன்னவென்று சொல்வது ?

– குணசீலன்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.