Home » கணினி » CMD ல் COPY, PASTE செய்யமுடியும்
CMD ல் COPY, PASTE செய்யமுடியும்

CMD ல் COPY, PASTE செய்யமுடியும்

Command Prompt என்பது சுருக்கமாக CMD என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் கணினி நன்றாக பயன்படுத்த தெரிந்தவராக இருந்தால், ஒருமுறையாவது CMD பக்கம் சென்றிருப்பீர்கள். பொதுவாக CMD-ல் Copy, Paste செய்யமுடியாது, இதனால் நீங்கள் வோர்ட்,நோட்பேட் அல்லது இணையதளங்களில் எதாவது command பார்த்துவிட்டு டைப் மட்டுமே செய்யமுடியும். அப்படி நாம் பார்த்துவிட்டு டைப் செய்யும் command கள், பல நேரங்களில் தவறாக போய்விடும்.

இதை தவிர்க்க ஒரு வழி இருக்கிறது.

1 . Windows Key + R கீயை அழுத்துங்கள்.

1

2 . தோன்றும் பெட்டியில் CMD என்று டைப் செய்யுங்கள்.

3 . CMD தோன்றியபிறகு, கீழே உள்ள படத்தில் உள்ளது போல் கிளிக் செய்து Properties செல்க.

CMD

4 .   அங்கு Edit Options கீழ் Quick Edit Mode கிளிக் செய்துகொண்டால்,அவ்வளவுதான்.

cmd

5 . இப்போது நீங்கள் விருப்பப்பட்ட தளமோ அல்லது Word Document க்கோ சென்று கொள்ளுங்கள்.தேவையான Text களை செலக்ட் செய்து Ctrl+C மூலம் copy செய்துகொண்டு, CMD ல் right click செய்தால் போதும்.

6 . அதபோல் CMD குள்ளே Copy, paste செய்துகொள்ள, வேண்டிய text களை Cursor மூலமாக செலக்ட் செய்துகொண்டு, வேண்டிய இடத்தில Right Click செய்தால் போதும்.

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.