Home » பொதுவானவை » E- Mail ல கண்டுபிடிச்சவர் நம்ம அய்யாதுரை
E- Mail ல கண்டுபிடிச்சவர் நம்ம அய்யாதுரை

E- Mail ல கண்டுபிடிச்சவர் நம்ம அய்யாதுரை

கடிதம் போட்டு பல மாதங்கள் பதிலுக்காக காத்திருந்த நேரம் போய், இன்னைக்கு நொடி பொழுதுல E- mail என்கின்ற பெயரில் கடிதங்கள் பறந்துகொண்டிருக்குதுனா அதுக்கு காரணம், விஞ்ஞானம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இதற்க்கு பின்னாடி ஒருதர்ரோட உழைப்பும் பல சரித்தர கதைகளும் இருக்கு.  

சிறிய வயதில் சிவா அய்யாதுரை (இடது)

சிறிய வயதில் சிவா அய்யாதுரை (இடது)

டாக்டர். சிவா அய்யாதுரை, ராஜபாளையத்தை பூர்விகமாக கொண்ட தமிழர். இவர்தான் E- Mail ல கண்டுபிடிச்சார் என்ற தகவல் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரை பற்றி இவரே சொல்கிறார் கேளுங்கள்.

“பிறந்தது தமிழ்நாட்டில், படிப்பிற்காக எனக்கு 7 வயசு இருக்கும்போதே நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்துடோம். பள்ளியில் படிக்கும்போது நியூயார்க் பல்கலைகழகத்தில், உலகம்  முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  40 மாணவர்களுடன் சேர்ந்து FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ப்ரோக்ராம்மிங் மொழிகளை கற்றேன்.

இதன் பின்னர், 1978 ல் “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி” யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன்” . இந்த நிறுவனத்தில் செய்திகளை பரிமாறிக்கொள்ள காகிதங்களே பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இதை போக்குவதற்கு வழி எதாவது இருக்கிறதா ? என்று என்னிடம் கேட்டபோது, தோன்றியது தான் E-Mail .

சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை கொண்ட இந்த E-Mail ப்ரோக்ராம்களை நானே பல நாட்கள் தூக்கம் தொலைத்து எழுதினேன். E-Mail லை கண்டுபிடித்த போது எனக்கு 14 வயது. இதன் பின்னர் காப்புரிமைக்காக 1982  ம் ஆண்டு அமெரிக்கா காப்புரிமை அலுவலகத்தை அணுகி, எனது கண்டுபிடிப்பிற்காக காப்புரிமை பெற்றேன்” .

இதன் பின்னர் இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்தியாவில் வந்து கொஞ்ச காலம் வேலை பாத்திருக்கிறார். ஆனால் இங்கே ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் பெரிதாக எடுத்துகொள்ள படாமல், பல தடைகள் வந்ததால், திரும்ப அமெரிக்கா சென்று விட்டார்.

எதிர்காலத்தில் இந்திய போன்ற பெரிய நாடுகளில் வேலை வாய்ப்பை பெருக்க, புதிய புதிய கண்டுபிடிப்புகள் மிக அவசியம். அதற்கான சூழலை இந்தியாவில் ஏற்படுத்தி தந்தாலே போதும் கண்டுபிடிப்புகள் தானே நிகழும் என்பது இவரின் கருத்து.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.