Home » பொதுவானவை » அப்வொர்க்கில் சம்பாதிக்கலாம் ? பகுதி 2
அப்வொர்க்கில் சம்பாதிக்கலாம் ? பகுதி 2

அப்வொர்க்கில் சம்பாதிக்கலாம் ? பகுதி 2

பிறகு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், அவர் சொன்னபடியே ரூபாய் 10,000 த்தை அவர் வங்கி கணக்கில் செலுத்தினோம். இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றிருந்த எங்களுக்கு கடைசியில் மிஞ்சியது என்னவோ, ஏமாற்றமும், பண விரயமும்தான்.

பகுதி I படிக்க : ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி-I  

எங்களிடம் அவர் ஏமாற்றியது போலவே பலரிடமும் அவர் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி இருப்பது  பிறகுதான் எங்களுக்கு தெரியவந்தது.  இதை போலீஸிடம் எடுத்து செல்லலாம் என்று என் நண்பர் சொன்னார். அய்யோ சாமி போதும், இதை இதோட விட்டுடலாம் என ஒரு பெரிய கும்புடு போட்டுவிட்டு, ஆன்லைனில் சரியாக சம்பாதிக்கும் வழிகளை கண்டுபிடிக்க முற்பட்டேன்.

அப்போதுதான் புரிந்தது, இது நாள் வரை எவ்வளவு முட்டாளாக இருந்துள்ளேன் என்று. ஒன்றுமே தெரியாமல், ஒரு வேலையும் செய்யாமல் யார் சம்பளம் கொடுப்பார் ? இது உலகில் எங்காவது நடக்குமா ?? அது போலதான் ஆன்லைனிலும் இது நடக்காது.

அப்வொர்க் ( Upwork )

ஆகவே நண்பர் ஒருவரின் ஆலோசனை படி அப்வொர்க் என்னும் இணையதளத்தை கண்டுபிடித்தேன். முன்பு Odesk என்று பெயரில் இயங்கிகொண்டிருந்த இந்த இணையதளம் தற்போது பெயர் மாற்றம் பெற்று அப்வொர்க்  என்று இயங்கி வருகிறது.

இந்த தளத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் , இந்த தளத்தில் முழுவதும் கணினியில் அமர்ந்து செய்யும் வேலைகளே மிக அதிகம்.

அதுவும் நீங்கள் வசிக்கும் இடத்தில் இருந்தபடியே. இந்த தளத்தில் வெப் டிசைனிங், டேட்டா டைப்பிங், போட்டோஷாப் டிசைனிங், ஆட்டோகேட், எஸ்.ஈ.ஒ  போன்று 1000 துறைகளில் உள்ளே வேலைவாய்பு கொட்டிக்கிடக்கிறது.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், முதலில்  அபவொர்க்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் தகுதிக்கு தகுந்த வேலையை தேட வேண்டும்.

பிறகு அந்த வேலைக்காக நீங்கள் உங்கள் அப்ளிகேஷனை அனுப்ப வேண்டும். வேலைகொடுப்பவர் உங்கள் அப்ளிகேஷனை பார்த்துவிட்டு உங்களை மின்னஞ்சல் மூலமாக அழைப்பார். பிறகு உங்களை பிடித்திருந்தால், அந்த வேலையை உங்களுக்கு கொடுப்பார்கள்.

சம்பளம்

Hourly , Fixed என்ற இருமுறைகள் படி சம்பளம் வழங்கப்படும், Fixed முறைப்படி நீங்கள் ஒருவேலை செய்துகொடுத்தால், உங்களுக்கு ஒரே முறையில் ஒரு தொகை சம்பளமாக வழங்கப்பட்டுவிடும். இதுவே Hourly முறையில் நீங்கள் வேலை செய்தால், ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு டாலர்கள் என கணக்கின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

சம்பளத்தை எப்படி பெறுவது ?

நமது பேங்க் அக்கௌன்ட் மூலம் நமக்கு சேரவேண்டிய பணத்தை பெறலாம்.

இந்த Upwork நிறுவனம் ஒரு மோசடி நிறுவனமா ?

இல்லவே .. இல்லை .. இந்த நிறுவனம் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம். இதில் பல நாட்டை சேர்ந்த பல லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். Pinterest, Panasonic, Unilever போன்ற பெரிய நிறுவனங்களே இந்த Upwork ல் இருந்து வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

என்ன தேவை?

  1. ஒரு கணினி
  2. ஹெட் போன், வெப்கேம்
  3. இன்டர்நெட் இணைப்பு
  4. ஆங்கில புலமை

இவை   இருந்தால் போதும் நீங்கள் Upwork ல் தாரளமாக வேலை செய்யலாம்.

(அடுத்த வாரம் பகுதி -3 ல் சந்திக்கிறேன்)

தளம் செல்ல : http://upwork.com

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.