Home » மொபைல் » கம்பெனியை மூடியாச்சு – ப்ரீடம் போன் புதிய சர்ச்சை
கம்பெனியை மூடியாச்சு – ப்ரீடம் போன் புதிய சர்ச்சை

கம்பெனியை மூடியாச்சு – ப்ரீடம் போன் புதிய சர்ச்சை

ஒரே நாளில் இந்தியாவை மட்டுமில்லாமல் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த ப்ரீடம் ஃபோனால் (Freedom Phone)  பிரச்சினை வளர்ந்து கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனம் (Ringing Bells), முதல் நாள் விற்பனை அன்று பணம் செலுத்திய 30,000 வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி தருவதாக அறிவித்தது. இதற்கு பலர் பலவிதமான கருத்துகளை முன் வைத்தாலும், உண்மை நிலவரம் என்பது யாருக்கும் தெரியவில்லை.

அடுத்ததாக இந்த நிறுவனம் ஏற்கனவே ஆட்கான் என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்ட போன்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டு தற்போது இந்த குறைந்த விலைக்கு விற்பதாக குற்ற சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்ததாக, வருமான வரித்துறையினர் இந்த நிறுவனத்தை சோதனை செய்தனர்.

படிங்க:  வாட்ஸ்ஆப் இலவசம்- உள்ளுக்குள் இருக்கும் பிசினஸ் தந்திரம்

தற்போது, புதிய செய்தியாக இந்த நிறுவனமே மூடப்பட்டதாக ஹிந்தி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதனால் இந்த பிரச்சினை எங்கு சென்று முடியும் என்று யாராலும் ஒரு வழி சொல்ல முடியவில்லை.

Hindi News paper freedom phone

செய்தி : trak.in

இதனிடையே இது மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கம் அல்ல. எங்களால் இது பற்றி ஏதும் செய்ய முடியாது என்பது போல் மத்திய அரசும் மறுத்திருப்பதால் ப்ரீடம் போன் கொஞ்சம் சந்தேகம்தான்.

படிங்க:  உங்கள் இன்டர்நெட் செலவை மிச்சப்படுத்த 4 வழிகள்

ஒரு வேளை நீங்கள் பணம் செலுத்தியிருந்தால் கீழே உள்ள கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.