Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » உங்கள் Gmail அக்கௌன்ட் ?
உங்கள் Gmail அக்கௌன்ட் ?

உங்கள் Gmail அக்கௌன்ட் ?

கொஞ்ச நாளைக்கு முன்தான் ஹாலிவுட் நடிகைகளின் பர்சனல் படங்கள் iCloud லிருந்து கசிந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு iCloud ன் உரிமையாளரான Apple நிறுவனம், இந்த சம்பவத்திற்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்று கொள்ளமுடியாது என்று திட்ட வட்டமாக கூறிவிட்டது. இது ஒரு புறம் இருக்க, தற்போது 5 மில்லியன் Gmail  கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக  செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த  ஹாக்கர்ஸ் (Hacker) குழு, தாங்கள் 5 மில்லியன் ஜிமெயில் அக்கௌன்ட்களை ஹாக் செய்துவிட்டதாக ஒரு தகவலை வெளியிட்டது அனைவர் வயித்துலயும் புளியகரைச்ச கதைதான் . ஆனால் இந்த தகவலுக்கு ஜிமெயில் மறுப்பு தெரிவித்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தா நல்லதுதானே.அதனால் உடனே உங்கள் அக்கௌன்ட்ன் password மாற்றிவிடுங்கள். பிறகு உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் சென்று  Gmail Two step Verification செய்துகொள்வது நல்லது. Gmail Two Step Verification செய்துகொள்ளவதால் உங்கள் அக்கௌன்டை நீங்கள் திறக்க முற்படும் போதெல்லாம் உங்கள் அலைபேசிக்கு ஒரு Verification SMS ஒன்று வரும், அதில் கொடுக்கப்பட்டுள்ள ரகசிய நம்பரை நீங்கள் என்டர் செய்தால் மட்டுமே உங்கள் அக்கௌன்ட்குள் நுழையலாம்.

இந்த அமைப்பால் உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்குள் உங்களை தவிர வேறு யாரும் நுழையாமல் தவிர்க்கமுடியும்.

குறிப்பு : இந்த லின்குகுள் சென்று உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

முடிந்தால் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள் .

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.