Home » கணினி » கூகிள் தேடுதலுக்கு சில டிப்ஸ்
கூகிள் தேடுதலுக்கு சில டிப்ஸ்

கூகிள் தேடுதலுக்கு சில டிப்ஸ்

இன்று நமக்கு எதாவது ஒன்று தெரியவில்லை என்றால், உடனே கூகிள் செய்து விடுகிறோம். நீங்கள் எதுபற்றி தேடினாலும், விடை கொடுக்கும் கூகிளில் சில தேடுதல் டிப்ஸ் இருக்கிறது. இதை நீங்கள் தெரிந்துக்கொண்டால், தேடுதல் கொஞ்சம் சுலபமாக இருக்கும்.


1. ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள எல்லா பதிவுகளையும் பார்க்க விரும்பினால், “ site:tamilexplorer.com ” (அடைப்புகுறிகள் இல்லாமல்) என்று டைப் செய்யுங்கள். தளத்தில் உள்ள அத்தனை பதிவுகளும் உங்களுக்கு கிடைக்கும்.

2. ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துக்கொள்ள “ Define: chocolate ” என்பதுபோல் டைப் செய்தால், வார்த்தைக்கான அர்த்தம் தெரிந்துக்கொள்ளலாம்.

3. சாதாரண கூட்டல், கழித்தல் முதல் COS, Tan வரை எல்லா கணக்குகளையும் செய்து பார்க்கலாம். கூகிள் கால்குலேட்டர் வசதி பெற 50*25 என கொடுத்து பாருங்கள்.

படிங்க: அம்பானியின் கார் விலை தெரியுமா ?? அம்மாடி …!

4. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு, வார்த்தைகளை மொழிபெயர்க்க, “translate english to spanish hello” என்பது போல் கொடுக்கலாம்.

5. உங்கள் இன்டர்நெட் ஐ.பீ அட்ரஸ் தெரிந்துக்கொள்ள “Ip address” என டைப் செய்யுங்கள்.

6. ஒரு நாட்டின் நேரத்தை சரியாக தெரிந்துக்கொள்ள, “Time America” என டைப் செய்யலாம்.

அதே போன்று, வீட்டில் குழந்தைகள் கணினிகளை பயன்படுத்துவார்கள், அந்த நேரத்தில் ஆபாச தகவல் கூகிள் தேடுதலில் வராத வண்ணம் லாக் செய்து வைத்துக் கொள்வது, நல்லது. சரி. அதை எப்படி செய்வது என பார்ப்போம்.

1.       முதலில் Google.com சென்று உங்கள் கூகிள் கணக்கிற்குள் நுழைந்துக் கொள்ளுங்கள்.

2.       கூகிள் முகப்பு பக்கத்தில் கீழ் வலது மூலையில் Settings என்று இருக்கும். இப்போது அதை கிளிக் செய்தால், Search settings என்று வரும், அதை கிளிக் செய்யுங்கள்.

எனது வெப் டிசைனிங்  புத்தகத்தின் இலவச பக்கங்களை படிக்க

3.       இப்போது அடுத்த பக்கத்துக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். அங்கு Safe Search Filters என்பதற்கு கீழே, Turn On Safe Search என்று இருக்கும். அதனை தேர்ந்தெடுத்துக் கொண்டு கீழே உள்ள save பட்டனை கிளிக் செய்துவிட்டால், ஆபாசம் சம்பந்தப்பட்ட எந்த தகவலும் கூகிள் தேடுதல் முடிவில் இனி தோன்றாது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலையில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.