Home » பொதுவானவை » குணா குகை – ஒரு பார்வை
குணா குகை – ஒரு பார்வை

குணா குகை – ஒரு பார்வை

இயற்கை நமக்கு அளித்த கொடைகள் எவ்வளோவோ இன்னும் இந்த உலகில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தாலும், கண்டுபிடித்த சில இயற்கை மர்மங்களே “எப்பா போதும்டா சாமி” என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது. அப்படி இன்று நாம் பார்க்க போகும் இடத்தின் பெயர் குணா பாறை.மலைகளின் ராணி, என்று கொண்டாடப்படும் கொடைக்கானலில் உள்ளதுதான் இந்த குணா குகை . நடிகர் கமலஹாசன் நடித்த குணா திரைப்படம் இங்கு படமாக்க பட்ட பிறகுதான், இது குணா குகை என்று பெயர்  பெற்றது. அதற்க்கு முன்பு வரை இதன் பெயர் ” பேய்களின் சமையலறை ” (DEVIL’s KITCHEN) என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது .

குறைந்த பட்சம் 500 அடி ஆழமுள்ள குணா குகை , மேலிருந்து பார்பதற்கு சிறியது போன்று தோன்றினாலும், உள்ளே சென்றுவிட்டால் அவ்வளவுதான்.

ஒரு இளைஞர்

குணா பாறைக்கு முன் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை

இது வரை சேகரித்த தகவல் படி, இதன் உள்ளே சென்றவர்கள் யாரும் இதுவரை வெளியே திரும்பி வந்ததில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, 12 பேர் கொண்ட இளைஞர்கள் குழு குணா குகை யுனுள் சென்று என்னதான் இருக்கிறது என்று பார்க்க சென்றார்கள். கடைசியில் “போனவன் போனவந்தாண்டி” என்றது போல் ஒருவர் கூட திரும்பிவரவில்லை. இதே போல் மற்றொரு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் குணா குகைக்குள் தவறி விழுந்துவிட்டார், பின்னர் தீவிர முயற்சியின் பேரில்  பல மணி நேரங்களுக்கு  பிறகு அதிஷ்டவசமாக காப்பாற்றபட்டுள்ளார்.குணா பாறையினுள் விழுந்து மீண்டவர் இவர் ஒருவரே.

இந்த சம்பவத்திற்கு பிறகு அரசாங்கம், பொதுமக்கள் இந்த இடத்திற்கு செல்ல தடை விதித்துள்ளது. குணா குகை தொடங்கும் நூறடிக்கு முன்பாகவே கம்பி வேலி போடப்பட்டுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் குணா குகை யை பார்க்கலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.