பேஸ்புக் பக்கம் போனால் போதும் சிலர் விளையாடுவதற்கு கோரிக்கை அனுப்பி இருப்பார்கள். இதை பார்த்த உடனே, அட என்னையா இது “காண்டி கிரஷ் சாகானு” நம்மளை சாகடிகுதுன்னு பல பேர் புலம்பிஇருக்கலாம் . இதோ இதுபோன்ற தேவை இல்லாத பேஸ்புக் அழைப்புகளை தடுப்பது பற்றி ஒரு பதிவு .
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். படத்தில் காட்டப்பட்டுள்ள கீழ் அம்பு குறியில் கிளிக் செய்யுங்கள்.
அதில் செட்டிங்க்ஸ் என்னும் பகுதியை கிளிக் செய்யுங்கள்.
இப்போது இடது பக்கத்தில் ப்ளொக்கிங் (Blocking) என்று இருக்கும் பகுதியை கிளிக் செய்யுங்கள்.
இப்போது இந்த பகுதி ஆறு பகுதிகளாக பிரிக்கபட்டிருக்கும், அதில் 5 வது பகுதியான பிளாக் ஆப்ஸ் பகுதியில் உங்களை அடிகடி தொந்தரவு படுத்தும் பெயரை பதிவு செய்தால் போதும்.
இனி நீங்கள் பெயர் குறிப்பிட்ட கேம் அழைப்புகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இது மட்டுமின்றி நண்பர்களிடம் இருந்து வரும் மற்ற அழைப்புகளையும் இந்த பகுதி மூலம் கட்டுபடுத்தலாம்.
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017