Home » கணினி » வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !
வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !

வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !

தலைப்பை கண்டு இன்று என்ன இவர் எழுதியிருக்கிறார் என்று ஆவலாக என் தளம் வந்திருக்கும் நண்பர்களே வணக்கம்! . ஆன்லைன் சந்தைகளில் நடப்பது எல்லாமே ஃபிராடுதான்பா. சரிதான் ஆன்லைன்ல லட்சம் சம்பாதிக்கலாம், கோடிகள் சம்பாதிக்கலாம் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். இதெல்லாம் உண்மையா. அப்படி உண்மையெனில் எப்படி எல்லோரும் சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிற்குள்ளேயே தோன்றும்.

அப்படிப்பட்ட உங்கள் கேள்விகளுக்கு இந்த பதிவில் ஓரளவு விடை சொல்கிறேன். மிச்சத்தை கூடிய விரைவில் வரும் பதிவுகளில் சொல்லிவிடுகிறேன்.

ஆன்லைனில் சம்பாதிப்பது என்னவோ உண்மையான ஒரு விஷயம்தான். ஆனால் சரியான முறையை தேர்ந்தெடுத்து சம்பாதிப்பதுதான் பலருக்கு தெரியாத விசயமாக இருக்கிறது. Data Entry செய்யலாமா, Form Filling, Survey செய்யலாமா என்று சில பேர் யோசிப்பீங்க. ஆனால் அதெல்லாம் இல்லை.

அதுக்கும் மேல ! வெப் சைட் தொடங்கலாம்.

வெப் சைட்டா ? யோவ் என்கிட்டே அந்தளவுக்கெல்லாம் பணம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? பரவாயில்லை.

ரூ. 1000/- (ஆயிரம் மட்டும் தான்) எப்படியாவது கஷ்டப்பட்டு சேமித்து வையுங்கள். அது போதும் உங்கள் வெப் சைட் ரெடி. நிஜமாக 1000 ரூபாயில் வெப் சைட் செய்து விட முடியுமா? நிச்சயம். நீங்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கும் Tamilexplorer.com கூட 1000/- ரூபாயில் செய்ததுதான்.

அதோடு ஆயிரம் ரூபாயில் எப்படி வெப் சைட் செய்வது என்பது பற்றி புத்தகமும் எழுதியுள்ளேன். விருப்பம் இருந்தால் வாங்கி படிக்கலாம். புத்தகம் வாங்க கிளிக் செய்யலாம்

சரி. நான் எழுத நினைத்ததை விட்டுவிட்டு எங்கேயோ செல்கிறேன். இந்த தலைப்பின் படி உலகளவில் ஒரு வெப் சைட் நடத்தி அதன் மூலம் மாதமாதம் லட்சம் கோடிகளில் வருமானம் பெறுபவர்களை பற்றிதான் பார்க்கப்போகிறோம்.

நமது பட்டியலில் முதல் இடம் John Lee Dumas அவர்களுக்குதான்

JohnLeeDumasheadsh

இவர் மாதத்திற்கு  இவரது தளமான http://www.eofire.com/ மூலம் இந்திய ரூபாய் மதிப்பில்1.5 கோடி சம்பாதிக்கிறார். சரி இவர் என்ன செய்து இவ்வளவு சம்பாதிக்கிறார். PodCast செய்துதான். அது என்ன Podcast.

நம்மூர் ரேடியோவில் எதாவது ஒரு தலைப்பை வைத்து பேசுவார்களே அதுப்போல இவரும் தினசரி ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு பேசுகிறார். பெரும்பாலும் பிசினஸ் குறித்த தலைப்புகளில் இவர் பேசுகிறார். பேசியா இவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இன்டர்நெட் உலகில் யாருக்கு எப்படி அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லவே முடியாது.

இவரது தளம் செல்ல : http://www.eofire.com/

வருமானம் : 1.5 கோடி

Jon_Dykstra_200x200

இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஆன்லைனில் இவர் பணம் சம்பாதிக்கும் முறைகள், அதில் கையாள வேண்டிய நேக்கு போக்குகள், ஒரு இணையதளம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும். கூகிள் எப்படி நம் இணையதளத்தை பார்க்கிறது. அதற்கு தகுந்தது போல் நமது தளத்தை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல விஷயங்களை இவர் தம் வலைத்தளத்தில் கற்று தருகிறார். இதனால் இவரது தளத்திற்கு மாதம் தோறும் லட்சக்கணக்கான இணைய வாசிப்பாளர்கள் வந்து போகிறார்கள். இத்தனைக்கும் இவர் இணையதளம் ஆரம்பித்து 6 மாதத்திலேயே இவ்வளவு பணம் ஈட்ட ஆரம்பித்து விட்டார்.  இவரது தளத்திற்கு சென்று இவரது வருமானம் குறித்த தகவல்களை நீங்கள் காணலாம்.

இவரது தளம் செல்ல: http://fatstacksblog.com/

மாதம் சராசரி வருமானம் : 32 லட்சம்

Pat Flynn

pat flyn

http://www.smartpassiveincome.com/ என்ற தளத்தை நடத்தி வரும் இவர், வெப் சைட் தொடங்குவது எப்படி, பிறகு அதை வைத்து பணம் செய்வது எப்படி போன்ற பல்வேறு தரப்பட்ட விஷயங்களை நமக்கு சொல்லித்தருகிறார். இணையத்தில் இது குறித்து இவர் பேசும் Podcast களும் மிகக்  பிரபலம். இவரது மாத வருமானம் அவ்வபோது மாறிக்கொண்டே இருந்தாலும், தோராயமாக ஒரு மாதத்திற்கு 60 முதல்  70 லட்சத்தை நெருங்குகின்றது. கடந்த டிசம்பர் மாதம் இவரது தளத்தில் இவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவர் அந்த மாதம் மட்டும் சுமார் 71 லட்சம் சம்பாதித்தாக தெரிவித்துள்ளார்.

இவரது தளம் செல்ல: http://www.smartpassiveincome.com/

மாதம் சராசரி வருமானம் : 60 முதல்  70 லட்சம்

ஹர்ஷ் அகர்வால் [Harsh Agarwal]

Harsh-Agarwal

http://www.shoutmeloud.com/ என்ற இணையதளத்தை நடத்தி வரும் இவர் ஒரு இந்தியர். இவருக்கும் அதிகமாக சம்பாதிக்கும் வெளிநாட்டினர் பலர் இருந்தாலும், நமது இந்தியர் என்ற நோக்கில் இவரை இந்த பட்டியலில் சீக்கிரம் சேர்த்து விட்டேன். இல்லையெனில் ஹர்ஷ் அகர்வால் 10 வது இடத்தில் தான் வருவார். சரி இவர் என்ன செய்கிறார்.

இவர் பெரும்பாலும் தன்னுடைய தளத்தில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது, இணையதளம் அமைப்பது குறித்த கட்டுரைகளை எழுதுகிறார். அதிலும் இவரது விமர்சன கட்டுரைகள் மிகவும் பிரமாதம். ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அது எப்படி இயங்குகிறது, இதை வாங்கலாமா வாங்கக்கூடாதா என்பது போல எழுதுவதுதான் விமர்சன கட்டுரைகளை என்று சொல்வார்கள்.

இவரது செப்டம்பர் மாத புள்ளி விபரப்படி இவர் ரூ.11 லட்சம் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார். இந்த விபரங்களை இவரது தளத்தில் சென்று நீங்களே பார்க்கலாம்.

இது போல இன்னும் ஏராளமான இணையதள நிறுவனங்கள், தனி நபர்கள் சத்தமின்றி இணையத்தில் சம்பாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்த பதிவில் அடுக்க வேண்டுமென்றால் இந்த பதிவை எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அதனால் நீங்களும் ஒரு இணையதளம் துவங்குங்கள். என்னுடைய இணையதளத்தையும் அவ்வபோது படித்து வாருங்கள்.

வாழ்வில் நல்லது நடக்கும். வாழ்த்துகள்.

அடுத்து வரும் என்னுடைய பிரத்தியோக குறிப்புக்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை உங்கள் இமெயிலில் பெற இங்கு கிளிக் செய்து உங்கள் ஈமெயில் முகவரி கொடுக்கலாம்.

குறிப்பு: உண்மையாக ஆர்வம் இருந்தால் மட்டும் கொடுங்கள். கட்டாயம் ஏதுமில்லை.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.