Home » பொதுவானவை » ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி ? பகுதி 1
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி ? பகுதி 1

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி ? பகுதி 1

ஆன்லைனில் பணம் செய்வது எப்படி என்பது இன்று வரை யாருக்கும் அவ்வளவாக புரிவதில்லை. மாசம் 5 லட்சம் சம்பாதிக்கலாம் , 10 லட்சம் சம்பாதிக்கலாம் என நானும் உங்களை ஏமாற்றபோவதில்லை. இந்த தொடரை முழுமையாக படித்துக்கொண்டு வாருங்கள். பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை என்னால் முடிந்த அளவு உங்களுக்கு நான் சொல்லித்தருகிறேன்.

என் சொந்த அனுபவம்

சில வருடங்களுக்கு முன்பு, ( அது நான் வேலை தேடிக்கொண்டிருந்த காலம்)  என் நண்பர் ஒருவர், மறுநாள் என்னை ஒரு முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறினார். நானும் சரி போகலாம் என்றேன். நண்பர் சொன்னபடியே மறுநாள் என்னை அந்த இடத்திற்கு அழைத்து சென்றார். உள்ளே சென்றதும், வரவேற்ப்பு பகுதியில் உள்ள பெண்மணி ஒருவர் என் நண்பரிடம் ” சார் நீங்க வந்தா வெயிட் பண்ண சொன்னாங்க, இப்போ வந்துருவாங்க ! கொஞ்சம் உட்காருங்க என்று அருகில் இருந்த சோபாவை காண்பித்தார். சரியாக ஒரு 10       நிமிடம் கடந்திருக்கும், அந்த நபர் (சார்) வந்துவிட்டார்.

அப்போதுதான் என் நண்பரிடம் கேட்டேன், யார் இவர் .. நாம இங்கே எதுக்கு வந்திருக்கோம்? என்றேன். ஆன்லைன் மூலமா நிறைய சம்பாதிக்க முடியும் என்று இந்த நிறுவனம் கொடுத்திருந்த விளம்பரம் பார்த்தேன்.. உடனே தொடர்புகொண்ட போது நேரில் வந்து பார்க்க சொன்னார்கள். அதான் உன்னையும் கூட்டிட்டு வந்தேன்.

இப்படி இருவரும் பேசிகொண்டிருந்த போதே உள்ளிருந்து அழைப்பு வந்தது. உள்ளே போனோம். கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான். நான் மாசத்துக்கு 10 லட்சம் சம்பாதிக்கிறேன், நீங்களும் சம்பாதிக்கலாம் என்று எடுத்த எடுப்பிலயே சொன்னார் இதை கேட்ட உடன் என் நண்பருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.

சரி சார். நாங்க ஆன்லைன்ல என்ன வேலை செய்யனும்னு கேட்டேன். அதற்க்கு அவர் சில இணைய தளங்களை கூறி இந்த தளங்களில் சென்று பதிவு செய்துக்கொண்டு அவர்கள் போடும் விளம்பரங்களை தினமும் பார்த்தால் பணம் கிடைக்கும் என்பது போல எதோ கூறினார்.. இது மட்டுமில்லாமல் இன்னும் சில   வழிகளையும் கூறினார்.  எனக்கு ஆரம்பத்தில் இருந்து இவர் சொல்லும் ஆன்லைன்  பிசினஸ் மேல் நம்பிக்கை இல்லை.

சரி நாங்க இப்போ என்ன பண்ணனும் என்றோம் . நீங்க பெருசா ஒன்னும் பண்ண வேணாம் . ஆளுக்கு தலா 10,000 (பத்தாயிரம்) ரூபாய் பணம் கட்டுங்கள். நான் உங்களுக்கு எல்லாமும் செய்துகொடுத்து விடுகிறேன். பிறகு நான் சொல்லும் வேலைகளை மட்டும் நீங்கள்  செய்தால் போதும் . பிறகு நீங்கள் லட்சாதிபதிதான் என்றார். இருவரும் சரி என்பது போல் தலை ஆட்டிவிட்டு வந்தோம்.

இதற்க்கு மேல் நடந்ததுதான் இன்னும் சுவாரசியம். அதை இன்னும் இரண்டு நாட்களில் தொடர்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுங்க . நன்றி

இந்த தொடர் கட்டுரையை பற்றிய நினைவூட்டலுக்கு, இந்த படிவத்தில்  உங்கள் மின்னஞ்சல் முகவரியை பகிருங்கள். படிவம் செல்ல இங்கே கிளிக் செய்க 

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.