Home » கணினி » அப்பிலியட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிப்பது எப்படி ?
அப்பிலியட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிப்பது எப்படி ?

அப்பிலியட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிப்பது எப்படி ?

பலருக்கு இணையத்தில் சம்பாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் எண்ணமும் இருக்கிறது, ஆனால் எப்படி என்பது மட்டும்தான் தெரிவதில்லை. ஒருவர் இணையத்தில் எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும், அப்படி சம்பாதிக்கும் வாய்ப்புகள் இணையத்தில் உண்மையாகவே உள்ளதா என்று புரிந்துகொள்ள மட்டும் தவறவிட்டு விடுகிறார். அந்த வழிகளை தெரியாதவர்களுக்கு சொல்லிகொடுக்கவே இந்த பதிவு.

இந்த பதிவில் எல்லா வழிகளையும் இன்றே சொல்லாமல், (மற்ற வழிகளை எதிர்வரும் நாட்களில் சொல்கிறேன்)

மறக்காமல் நமது இணையதள செய்திகளை உங்கள் மெயில் பாக்ஸில் பெற Subscribe செய்துக்கொள்ளுங்கள். என்னை சமூக வலையில் தொடர:http://facebook.com/tamilexplorer/

இன்று நாம் பார்க்கப் போகும் முதல் வழி, அப்பிலியட் மார்க்கெட்டிங் (Affiliate Marketing)

இது என்ன கேட்பதற்கு புதிதாக இருக்கிறதே என்று நினைக்கலாம். ஆனால் உலகில் உள்ள பலர் இதை வைத்துதான் மாதம் பல லட்சங்களை எந்த வேலையும் செய்யாமல் சம்பாதித்து வருகிறார்கள்.

சரி இதன் மூலம் நான் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்.

முதலில் இணையதளம் (Website) ஒன்றை உருவாக்க வேண்டும் ( இதை நானே இலவசமாக செய்துத்தருகிறேன்).

பின்னர் உங்கள் இணையதளத்திற்கு மக்களை கொண்டு வரும் வகையில் எதாவது ஒரு குறிப்பிட்ட துறையை பற்றி எழுத தெரிந்திருக்க வேண்டும். எழுத தெரிய வேண்டும் என்று சொன்னவுடன், பெரிய புலவர் ரேஞ்சுக்கு எழுத வேண்டுமோ என்று நினைக்க வேண்டாம், உங்களுக்கு தெரிந்த எதாவது ஒன்று , கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், செல்ல பிராணி வளர்ப்பு, சமையல் போன்ற எதாவது ஒன்று. அப்படி எனக்கு எதுவும் தெரியாது என்றால், கவலை இல்லை. உங்களுக்குள் நிச்சயம் எதாவது ஒரு திறமை இருக்கும் அதை வளர்த்துக்கொள்ளலாம் ( அதற்கு நான் உதவி செய்கிறேன்)

பிறகு, அமேசான் , பிலிப்கார்ட் போன்ற பல தளங்களின் அப்பிலியட் மார்க்கெட்டிங் திட்டங்களில் சேர வேண்டும்.

இந்த திட்டம் எப்படி இயங்குகிறது

நம்மூர்களில் ஒரு பொருளை விற்பனை செய்ய அல்லது வாங்க இடைத்தரகர்கள் இருப்பார்கள் அல்லவா? அதுதான் அப்பிலியட் மார்க்கெட்டிங். அதாவது ஸ்ரீ ராம் என்பவர் உங்கள் இணையதளத்திற்கு வந்து நீங்கள் அப்பிலியட் மார்க்கெட்டிங் செய்யும் எதாவது ஒரு பொருளை வாங்கும்போது, உங்கள் மூலம் விற்பனை செய்த அந்த நிறுவனம் உங்களுக்கு கமிஷன் என்ற பெயரில் ஒரு தொகையை கொடுக்கும். (புரியவில்லை என்றால் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்)

இதன் மூலம் மாதம் ஒரு கணிசமான ஒரு தொகையை நீங்கள் ஈட்ட முடியும்.

ஆங்கில இணையத்தளம் ஒன்றை நடத்தும் டெல்லி இளைஞர் இதுவரை ரூ. 50 லட்சம் சம்பாதித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் தளம் செல்ல http://www.shoutmeloud.com/bloggers-affiliate-earning-inspiration-80410-dollar.html

அப்பிலியட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிக்கும் ரகசியங்களை பற்றி இவர் ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். இதுவும் இதுவரை பல ஆயிர பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. இந்த புத்தகத்தை வாங்க : இங்கே கிளிக் செய்யலாம்  (உள்ளே என்னுடைய அப்பிலியட் லிங்க் வைத்துள்ளேன். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கு எனக்கு அப்பிலியட் முறையில் கமிஷன் கிடைக்கும்.

சிறந்த புரிதலுக்கான வீடியோவை காண: Click here or View here

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.