Home » கணினி » வைரஸ் தாக்கிய பென்ட்ரைவ் லிருந்து பைல்களை மீட்க
வைரஸ் தாக்கிய பென்ட்ரைவ் லிருந்து பைல்களை மீட்க

வைரஸ் தாக்கிய பென்ட்ரைவ் லிருந்து பைல்களை மீட்க

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் பென்ட்ரைவ் ஒரு முக்கியமான பொருள் ஆகி விட்டது ,முக்கியமான கோப்புகள் , படங்கள் ,ஆகியவற்றை சேமித்து வைத்திருப்போம் .

திடிரென்று ஒருநாள் வைரஸ் தாக்கி எல்லாம் காணாமல் போய்விடும் .ஆனா பென்ட்ரைவ் இன் மெமரி மட்டும் Full ல காட்டும் .அப்படியானால் பயந்து விடாதிர்கள் . இப்போது இந்த பதிவில் வைரஸ் தாக்கிய பென்டிரைவிலிருந்து பைல்களை எப்படி மீட்டெடுப்பது என்று பார்போம்.

1. முதலில் விண்டோஸ் கீ+ R அழுத்தவும் .

2. பிறகு தோன்றும் திரையில் CMD என தட்டச்சு செய்யவும் .

3. இப்போது ஒரு கருப்பு திரை ஒன்று தோன்றும் .அதில் கீழ் வரும் கட்டளையை தட்டச்சு செய்யுங்கள் .

How to recover files from pendrive

4. உதாரணத்திற்கு உங்கள் பென்டிரைவ் G: என்னும் டிரைவ்வில் இருக்கிறது என்றால் , G: பின்னர் ENTER கொடுத்து attrib s h/s/d*.* (இடைவெளியை கவனிக்கவும்) தட்டச்சு செய்யுங்கள் .

இப்போது, காணாமல் போன உங்களது பைல்கள் அனைத்தும்  திரும்ப கிடைத்து விடும்

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.