Home » சாப்ட்வேர் » தமிழில் தட்டச்சு செய்வது எப்படி ?
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி ?

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி ?

கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான வேலை . நான் வேலைசெய்த பள்ளியில், தலைமை ஆசிரியர் கண்ணில் பட்டால் ஏதாவது தமிழில் தட்டச்சு செய்ய சொல்வரோ என பயந்து ஒளிந்த உதவியாளர்களை நான்

பார்த்திருக்கிறேன் .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள் எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு ..

1. முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் Google Input tools

2.பிறகு தமிழ் என்ற வார்த்தையை கிளிக் செய்து விட்டு , “Google Terms of Service” Apply செய்து விட்டு டவுன்லோட் கொடுங்கள் .

3.டவுன்லோட் முடிந்து இன்ஸ்டால் ஆனவுடன் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம் .

எப்படி தட்டச்சு செய்வது
*************************************
இதில் தட்டச்சு செய்வது ரொம்ப எளிதுதான் ..உதாரணத்துக்கு Raja என்ற பெயரை தமிழில் தட்டச்சு செய்ய அப்படியே ஆங்கிலத்தில் Raja என்று டைப் செய்தால் போதும் .. (படம் பார்க்க )

வீடியோ பார்க்க

குறிப்பு : Win + Space கீகளை அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு தட்டச்சு செய்ய மாற்றிகொள்ளலாம் .

பயன்படுத்தி பார்த்து விட்டு , இடுகையில் சொல்லுங்கள் .

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.